வாசிஃப் துரார்பேய்லி
வாசிஃப் துரார்பேய்லி Vasif Durarbayli | |
---|---|
நாடு | அசர்பைஜான் |
பிறப்பு | பெப்ரவரி 24, 1992 சும்காயித் நகரம், அசர்பைசான் |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2010) |
பிடே தரவுகோள் | 2615 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2638 (மே 2022) |
வாசிஃப் துரார்பேய்லி (Vasif Durarbayli) அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு இவருக்கு 2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டமும் 2010 ஆம் ஆண்டில் கிராண்ட்மாசுட்டர் பட்டமும் வழங்கியது.
கல்வி
[தொகு]வாசிஃப் அசர்பைசானில் உள்ள சும்காயித்து நகரத்தில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். பக்கூ நகரத்திலுள்ள அசர்பைசான் மாநில உடற் கலாச்சாரம் மற்றும் விளையாட்டு அகாடமியில் விளையாட்டுப் பயிற்சியில் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இருக்கும் செயின்ட் லூயிசு நகரத்தின் வெப்சுடர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கிறார், மேலும் அங்கு மாணவர் அரசு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[1]
சதுரங்க வாழ்க்கை
[தொகு]1999 ஆம் ஆண்டில் இவர் தனது சதுரங்க வாழ்க்கையைத் தொடங்கினார். பல தேசிய பட்டங்களை வென்றுள்ளார். 2006 ஆம் ஆண்டில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐரோப்பிய இளையோர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் (புத்வா, செர்பியா) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக இளைஞர் சதுரங்கப் போட்டியையும் வென்றார் ( பாதுமி, சியார்ச்சியா ). 2010 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான (பாதுமி, சியார்ச்சியா) ஐரோப்பிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் அன்டன் கொரோபோவிடம் முதல் சுற்றில் தோற்றார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பையில் முதல் சுற்றில் வியட்நாம் நாட்டு சதுரங்க வீரர் லே குவாங் லீம் என்பவரால் வெளியேற்றப்பட்டார்.[2]
2018 ஆம் ஆண்டில், செயின்ட் லூயிசில் நடைபெற்ற கோடைகால சதுரங்கப் போட்டியில் முதல்நிலை குழுவை வென்றார்.[3] 2019 ஆம் ஆண்டில் ராசுமசு சுவானுடன் சமநிலை முறிவு ஆட்டங்களை வென்ற பிறகு சன்வே சிட்கெசு சதுரங்க விழாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றார்.[4]
2021 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார். அப்போட்டியில் தரவரிசையில் 93 ஆவது இடத்தில் இருந்த இவர் முதல் சுற்றில் திமிட்ரி வி. சுக்லியாரோவை 1.5–0.5 என்ற கணக்கில் தோற்கடித்தார், 36 ஆவது நிலை வீரரான அலெக்சாண்டர் ப்ரெட்கேவை 3–1 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றிலும், 29 ஆவது நிலை வீரரான டேவிட் நவராவை 1.5–0.5 என்ற கணக்கில் 3 ஆவது சுற்றிலும் தோற்கடித்தார். மற்றும் நான்காவது சுற்றில் நொதிர்பெக் அப்துசட்டோரோவ் 4-2.[5] என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.
2021 ஆம் ஆண்டில் இவர் நக்சிவனில் நடந்த அசர்பைசானின் சதுரங்க வெற்றியாளரானார்.
2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் விளையாடினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SPICE Profiles: Vasif Durarbayli". websterjournal.com.
- ↑ "Vasif Durarbayli". Chess Games. பார்க்கப்பட்ட நாள் December 8, 2013.
- ↑ "2018 SUMMER CHESS CLASSIC". uschesschamps.com.
- ↑ "The Week in Chess 1311". theweekinchess.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
- ↑ "Tournament tree — FIDE World Cup 2021". worldcup.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
புற இணைப்புகள்
[தொகு]- வாசிஃப் துரார்பேய்லி player profile and games at Chessgames.com