வாக்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்யா
வாக்யாவின் சிலை ராய்கட் கோட்டை
ஏனைய பெயர்(கள்)வாகியா
இனம்நாய்
வகைகலப்பினம்
பால்ஆண்
இறப்பு1680
Resting placeராய்கட் கோட்டை, மராத்திய பேரரசு
உரிமையாளர்சிவாஜி (பேரரசர்)

வாக்யா (மராத்தியில் புலி என்று பொருள்) மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கலப்பின வகை நாய் ஆகும்.[1][2][3] இது விசுவாசம் மற்றும் நிரந்தர பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.சிவாஜி மகாராஜாவின் மரணத்திற்க்கு பிறகு,தனது உடமையாளரின் இறுதிச் சடங்கில் தீக்குளித்து தன்னத்தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.[4]

ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் ஒரு பீடத்தில் வாக்யாவிற்க்கு ஒரு சிலை வைக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு வாக்யாவின் சிலை சாம்பாஜி படையணியைச் சார்ந்தவர்களால் அகற்றப்பட்டது,பின்னர் அது மீண்டும் நிறுவப்பட்டது.[5][6]

நினைவுச்சின்னம்[தொகு]

வாக்யாவின் நினைவாக,ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் நினைவுச்சின்னம் கட்ட,இந்தூர் இளவரசர் துகோஜி ஹோல்கர் ரூபாய் 5000 ஆயிரம் நன்கொடையாக தந்தார்.(2020 ஆம் ஆண்டில் அப்பணத்தின் மதிப்பு ரூபாய் 1.4 மில்லியன் அல்லது $ 18000 அமெரிக்க டாலர்களுக்கு சமம் ஆகும்.[7]

நரசிம்ம சிந்தாமன் கேல்கரின் தலைமையில் ஸ்ரீ சிவாஜி ராய்கட் ஸ்மாரக் சமாதியின் (எஸ்.எஸ்.ஆர்.எஸ்.எஸ்) பதாகையின் கீழ் 1936 ஆம் ஆண்டில் சிவாஜியின் நினைவிடத்தில் சமாதியின் மீது வாக்யாவின் சிலை அமைக்கப்பட்டதாக மிட் டே அறிக்கை தெரிவிக்கிறது.[8]

ராய்கட் கோட்டை வாக்யா சிலை தாக்குதல்[தொகு]

2011 ஆம் ஆண்டில், ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜின் நினைவிடத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள வாக்யாவின் சிலைக்கு எதிரான போராட்டம் மற்றும் தாக்குதலுக்கு சம்பாஜி பிரிகேட் என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. நாய் உண்மையானது அல்ல என்றும் அதற்கு நினைவுச் சின்னம் இருக்கக் கூடாது என்றும் அந்தக் குழு கூறி போராடியது. இந்தச் செயலை உள்ளூர் தங்கர் சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தனர், ஏனெனில் அவர்கள் நாய் உண்மையானது என்று நம்புகிறார்கள்.[9][10][11]

பிரபலமான கலாச்சரத்தில்[தொகு]

மராத்திய நாடக ஆசிரியரான ராம் கணேஷ் கட்கரியின் ராஜ்சன்யாஸ் என்ற நாடகத்தில், வாக்யாவின் வீரக்கதை சித்தரிக்கப்படுள்ளது.[12]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maratha outfit declares war on Shivaji's dog". News 18. May 26, 2011. https://www.news18.com/news/india/maratha-outfit-declares-war-on-shivaji-Maharaj's-dog-371119.html. 
  2. "Loyal To The End (& Beyond): History's 10 Most Faithful Dogs". Petslady.com. July 30, 2012. http://petslady.com/article/loyal-end-beyond-history-s-10-most-faithful-dogs. 
  3. "The real Indian dog". Frontline. August 4, 2017. http://www.frontline.in/books/the-real-indian-dog/article9775077.ece#test. 
  4. Bogart Morrow, Laurie (October 9, 2012). The Giant Book of Dog Names. Simon and Schuster. பக். 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781451666915. https://books.google.com/books?id=_9yBB54VXgcC&q=Waghya+dog&pg=PA406. 
  5. Shaikh, Zeeshan (May 21, 2011). "Remove dog statue from Shivaji memorial, says Sambhaji Brigade". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/mumbai/remove-dog-statue-from-shivaji-memorial-says-sambhaji-brigade/story-O4IlBN8YS7IB5bFgM7I96I.html. 
  6. Singh Parmar, Aditya (August 8, 2012). "Shivaji's Dog Restored Its Place at Raigarh". DNA India. http://dnasyndication.com/dna/dna_english_news_and_features/Shivaji_Maharaj's/DNIND12797. 
  7. Deshpande, Devidas (May 27, 2011). "Dog-eats-dog politics wants statue of Shivaji's pet out". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/MIRRORNEW/ArtWin.asp?From=Archive&Source=Page&Skin=MIRRORNEW&BaseHref=BGMIR%2F2011%2F05%2F27&ViewMode=HTML&EntityId=Ar01101&AppName=1. 
  8. Sabnis, Vivek (May 26, 2011). "Now, outfit declares war on Shivaji's dog". மிட் டே. https://www.mid-day.com/articles/now-outfit-declares-war-on-shivaji-s-dog/123128. 
  9. Maratha outfit declares war on Shivaji's dog , IBN Live
  10. "Legend of Shivaji's loyal dog questioned, statue removed". பிசினஸ் ஸ்டாண்டர்ட். January 25, 2013. http://www.business-standard.com/article/pti-stories/legend-of-shivaji-s-loyal-dog-questioned-statue-removed-112080100619_1.html. 
  11. "73 held for removing Shivaji dog's statue from Raigad fort". DNA India. August 3, 2012. http://www.dnaindia.com/mumbai/report-73-held-for-removing-shivaji-dog-s-statue-from-raigad-fort-1723352. 
  12. Mulla, Mohsin (May 24, 2011). "Dog statue near Shivaji memorial draws ire". DNA India. http://www.dnaindia.com/mumbai/report-dog-statue-near-shivaji-memorial-draws-ire-1546818. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்யா&oldid=3743665" இலிருந்து மீள்விக்கப்பட்டது