வள்ளிக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வள்ளிக்கிழங்கு

  • வள்ளி என்பது கிழங்கு தரும் கொடி. இது மலைகளில் தானே படரும். மாவலி எனப்படும் மாவள்ளிக் கிழங்குக் கொடியே இங்கு வள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இதம மாவலிக் கிழங்கை இக்காலத்தில் ஊறுகாய் போடப் பயன்படுத்துகின்றனர்.
  • ஆனைவள்ளி எனப்படும் நீர்வள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும் கிழங்கு. இது யானையின் கால் அளவு பருமன் கொண்டது. விற்பவர்கள் இதனைச் சிறுசிறு தகட்டுக் கீற்றுகளாக அரிந்து தருவர். இதன் நீரோட்டச் சுவை இனிப்பு.
  • வெற்றிலை-வள்ளிக்-கிழங்கு பயிரிப்படும். கொடியின் வேரில் கிழங்கு விழும். விளைய ஒன்பது மாதம் பிடிக்கும். இதன் கொடி வெற்றிலை போலவே இருக்கும். இதை அரியும்போது கொழகொழப்பான நீர் சுரக்கும். பொறியல் செய்து இதனை உண்பர். சமைத்து உண்ணும்போதும் நாவை அரிக்கும் நுணநுணப்பு இதில் இருக்கும்.
  • சர்க்கரை-வள்ளிக்-கிழங்கு கொடியின் வேரில் விளையும். பச்சையாகவே தின்னலாம். இனிக்கும். வேக வைத்தும், பொறியல் செய்தும் இதனை உண்பர்.
  • மரவள்ளி என்றும், ஆள்வள்ளி என்றும் கூறப்படும் கிழங்கு ஆள் உயரம் வளரும் செடியில் விழுவது. இதனைப் பச்சையாகவும், வேக வைத்தும், பொறியல் செய்தும், தோலை அகற்றிவிட்டு உண்பர்.

இவற்றில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் கிழங்கு கொடியின் வேரில் விழும் மாவலிக் கிழங்காகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிக்கிழங்கு&oldid=1926941" இருந்து மீள்விக்கப்பட்டது