வள்ளல் (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Convolvulaceae
பேரினம்: Ipomoea
இனம்: I. aquatica
இருசொற் பெயரீடு
Ipomoea aquatica
Forssk.

வள்ளல் அல்லது கங்குன் அல்லது வள்ளல் கீரை (Ipomoea aquatica) என்பது அரை நீர்த் தாவரமும், வெப்ப வலய இலைக் காய்கறியும், மூலிகைத் தாவரமும் ஆகும். இது உலகிலுள்ள வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படும் இதன் தாயகம் அறியப்படவில்லை.

வள்ளல் நீரில் அல்லது நீர் அதிகம் காணப்படும் நிலத்தில் வளரும். இதன் தண்டு 2–3 மீட்டர் (7–10 அடி) அல்லது அதற்கு மேல் வளரக்கூடியதும், முடிச்சுகளில் வேர் உருவாகக்கூடியதும், குழாய் போன்றதும், மிதக்கக்கூடியதும் ஆகும். பல வடிவங்களில் காணப்படும் இலை ஈட்டி முனை தோற்றத்தையும், 5–15 செ.மீ (2–6 அங்குலம்) நீளத்தையும் 2–8 செ.மீ (0.8–3 அங்குலம்) அகலத்தையும் கொண்டது. பூக்கள் எக்காள வடிவிலும், 3–5 செ.மீ (1–2 அங்குலம்) விட்டத்தையுடையதும், பொதுவாக வெள்ளையுடன் மத்தியில் வெளிறிய ஊதா நிறத்துடன் காணப்படும். இப்பூ வரைதலுக்கு பயன்படக்கூடிய விதையுறைகளை உருவாக்கக் கூடியது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளல்_(தாவரம்)&oldid=3909365" இலிருந்து மீள்விக்கப்பட்டது