வல்லவரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வல்லவரையன்
ஆட்சி மொழி தமிழ்
குலப்பெயர் வல்லவரையன்
தலைநகரம் வல்லம்

வல்லவரையன்[தொகு]

வல்லவரையன் குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் இவர்கள் வல்லவரையன் என்ற குலப் பெயருடன் ஆண்டு வந்தனர். வல்லவரையன் என்னும் பட்டமுள்ள கள்ளர் மரபினர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர்.[1] இவர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் பல்லவமன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். பிற்கால சோழர்கள் பல்லவரை வென்றவுடன் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். நாயன்மார்களின் தேவாரத்தில் இவர்கள் இறைப்பணி பற்றி பாடப்பட்டிருக்கிறது.

வல்லவரையர் வந்தியத்தேவன்[தொகு]

வல்லவரையன் வந்தியத்தேவன் வல்லவரையர் குல மரபினன் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவன்.

வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயிலில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவரையன்&oldid=3050079" இருந்து மீள்விக்கப்பட்டது