வல்லம் திரௌபதியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

வல்லம் திரௌபதியம்மன் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலிலுள்ள மூலவராக திரௌபதியம்மன் உள்ளார்.

அமைப்பு[தொகு]

இக்கோயில் சிறிய வாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, விமானம் ஆகியவற்றோடு விளங்குகிறது. கோயிலின் உட்புறம் வலது புறத்தில் சித்தி விநாயகரும் இடது புறத்தில் ஆஞ்சநேயரும் உள்ளனர். திருச்சுற்றில் மதுரை வீரன், சப்த கன்னிகள், நாகர், கமலக்கன்னி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]