வலைவாசல்:மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகு  

மொழி வலைவாசல்

மொழி (language) என்பது தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக மொழியைப் பற்றிக் கற்றல் மொழியியல் எனப்படும்.

மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மொழி குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை

Human Language Families (wikicolors).png

2007 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, 2008 ஆம் ஆண்டை அனைத்துலக மொழிகள் ஆண்டு என அறிவித்ததது.இது தொடர்பில் யுனெசுக்கோ எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே இந்த அறிவிப்பு வெளியானது. மொழிகள் தொடர்பான விடயங்கள் யுனெசுக்கோவுக்குக் கல்வி, அறிவியல், சமூக மற்றும் மானிட அறிவியல்கள், பண்பாடு, தொடர்பாடல், தகவல் ஆகியவை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைகளின் அடிப்படையாக அமைந்துள்ளதால், இந்நிகழ்வை யுனெசுக்கோவே முன்னணியில் நின்று செயல்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் அவையிலும் அதன் அலுவலக மொழிகள் எல்லாவற்றுக்கும் சமமான வாய்ப்புக்களும், வளங்களும் வழங்கவேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியமான பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஆறு அலுவலக மொழிகளிலும் மொழிபெயர்க்கும் வேலையை நிறைவாக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செயலாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டது.

மொழிகள் ஆண்டையொட்டிய செயல் திட்டங்கள் ஆய்வுகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டங்களுக்கு ஆதரவளித்தல், வலையமைப்புக்களை உருவாக்குதல், தகவல்களை வழங்குதல் போன்ற பல்வேறு வடிவங்களில் அமையலாம் என்று யுனெசுக்கோ அறிவுறுத்தியது.

நீங்களும் பங்களிக்கலாம்
Nuvola apps korganizer.png
  • மொழி தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • மொழி தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • மொழி தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • மொழி தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • மொழி தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

வலைவாசல்:மொழி/சிறப்புப் படங்கள்/செவ்வாய்


வலைவாசல்:மொழி/தொடர்புடைய வலைவாசல்கள் *

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மொழி&oldid=2085492" இருந்து மீள்விக்கப்பட்டது