வலைவாசல்:மெய்யியல்/தேர்ந்தெடுத்த கட்டுரை/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருநிலை பயனெறிமுறைத்துவம் என்பது அர்.எம். ஹேர் உருவாக்கிய ஓர் பயனெறிமுறை நன்னெறிக் கோட்பாடு. அதன்படி, 'நுட்பமான' அறநெறியாய்வு தேவைப்படும் சில அரிய சூழல்கள் தவிர்த்து, பிறவற்றில் நெறியான முடிவுகள் ஒருவரின் 'உள்ளுணர்வு' வழங்கும் நீதிநெறிப்படியே அமைய வேண்டும்.

பயனெறியாளர்கள் இயன்றவரையிலான சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களே சரியானவை என்று நம்புவர். இதனையே மரபார்ந்த பயனெறிமுறை, மொத்தத்தில் அதிகப்படியான மகிழ்ச்சியை அல்லது இன்பத்தை விளைவிப்பவையாக, மக்கள் தங்கள் செயல்களை அமைக்க வேண்டும் எனும் கூற்றாகக் கருதும்.

கிட்டத்தட்ட, செயல் பயனெறிமுறை மற்றும் விதி பயனெறிமுறை, எனும் மாறுபாடான கோட்பாடுகளின் இணைகோளாக அமைவது இருநிலை பயனெறிமுறை. செயல் பயனெறிமுறை, எச்சூழலிலும் அறச்செயலானது அதிகப்படியான இன்பத்தை விளைவிப்பதே என்று  கூறும்; ஆனால் விதி பயனெறிமுறையோ அறச்செயலானது, பொதுவாகக் கடைபிடித்தால் அதிகப்படியான இன்பத்தை விளைவிக்கக்கூடிய அறநெறிப்படி ஆற்றப்படும் செயலே என்று கூறும். இருநிலை பயனெறிமுறைப்படி, செயல் பயனெறிமுறையை 'நுட்பமான' அறச்சிந்தனைக்கு ஒப்பாகவும், விதி பயனெறிமுறையை 'உள்ளுணர்வு' வழங்கும் நெறிகளுக்கு ஒப்பாகவும் கருதலாம்.

மேலும் படிக்க...