வலைவாசல்:மெய்யியல்/இந்தவாரத் தத்துவஞானி/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்கிரட்டீசு கி.மு. 470 - கி.மு. 399

சாக்கிரட்டீசு மேற்குலக மெய்யியலுக்கு வித்திட்ட ஓர் புகழ்பெற்ற பண்டையக் கிரேக்கத் தத்துவஞானி. அவர் ஏதென்ஸில் பிறந்து வாழ்ந்தார். அங்கேயே அவர் மெய்யியல் அறிவுத் தேடலில் தம் காலத்தைக் கழித்தார். அவர் வாதங்களைத் தன் சொந்த பிம்பத்தைக் கொண்டே உய்த்துணர்ந்தார். மேலும் நண்பர்கள், சீடர்கள் மற்றும் சமகால மெய்யியலாளர்கள் உடனான கடுமையான தொடர் உரையாடல்கள் வாயிலாகவும் வாதங்களை ஆக்கினார். பின்னாளில் கிரேக்கத்தின் மிகப் பெரும் ஞானியாக அறியப்பட்டார்

சாக்கிரட்டீசு குறித்த கருத்துகள் பெரிதும் பிளவுபட்டுள்ளன; அவரை வெகுவாகப் புகழும் வண்ணம் சிலவும், வெகுவாகத் தூற்றும் வண்ணம் சிலதுமாக அமைந்துள்ளன. அவருக்கு பிளேட்டோ போன்ற மனமார்ந்த சீடர்களாகப் பலரும் கடுமையாகத் தூற்றுவோராகப் பலரும் இருந்தனர். வயது முதிர்ந்த காலத்தில் ஏதெனிய அரசாங்கத்தின் அவப்பெயரைச் சம்பாதித்தனால், அவரது பொதுவிட தர்க்கங்களுக்கும் இளம் செல்வந்தர்களுடனான அவரது உறவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. எனினும் அவர் வழக்கம் போலவே தம் பணிகளை மேற்கொண்டார். இறுதியாக, அவர் புதுப்புது கடவுட்களை உருவாக்கியும் (திரிபுக் கொள்கை), கடவுள் நம்பிக்கையை மறுத்தும் (இறைமறுப்பு) இளைஞர்களை கெடுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பழங்குறிப்புகளின்படி அவர் விடமருந்திச் சாகும்படி தீர்ப்பளிக்கப்பட்டது, இன்றேல் ஏதென்சைவிட்டு வெளியேற வாய்ப்பளிக்கப்பட்டது...