வலைவாசல்:கண்டி/சிறப்புப் படம்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.