வரைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரைதல் என்பது காட்சி கலையின் ஒரு வடிவம் ஆகும். இதில் ஒரு நபர் காகிதம் அல்லது மற்றொரு ஈரளவு வெளியில் குறிக்க பல்வேறு வரைதல் கருவிகளை பயன்படுத்துகிறார். உபகரணங்களில் கிராபைட் கரிக்கோல்கள், எழுதுகோல் மற்றும் மை, மை தூரிகைகள், மெழுகு வண்ண கரிக்கோல்கள், வண்ணத்தீட்டுக்கோல்கள், கரி, சுண்ணாம்பு, பேஸ்டல்கள், பல்வேறு வகையான அழிப்பான்கள், குறிப்பான்கள், ஸ்டைலஸ்கள், பல்வேறு உலோகங்கள் (வெள்ளிப்புள்ளி போன்றவை) மற்றும் மின்னணு வரைதல் போன்றவை அடங்கும்.

வரைபட கருவி ஒரு மேற்பரப்பில் சிறிய அளவிலான பொருளை வெளியிடுகிறது, இதனால் ஒரு புலப்படும் குறி ஏற்படுகிறது. வரைதலின் மிகவும் பொதுவான ஆதரவாக காகிதம் உள்ளது. எனினும் அட்டை, நெகிழி, தோல், கேன்வாஸ் மற்றும் பலகை போன்ற பிற பொருட்களும் பயன்படுத்தப்படலாம். தற்காலிக வரைபடங்கள் ஒரு கரும்பலகையில் அல்லது வெண்பலகையில் அல்லது உண்மையில் ஏறக்குறைய எதிலும் வரையப்படலாம். இக்கலை வடிவம் மனித வரலாறு முழுவதும் ஒரு புகழ்பெற்ற மற்றும் அடிப்படை பொது வெளிப்பாடாக உள்ளது. இது காட்சி கருத்துக்களை தொடர்பு கொள்ள எளிய மற்றும் மிகவும் திறமையான வழிகளில் ஒன்றாகும்.[1] ஓவியக் கருவிகளின் பரவலாக எளிதில் கிடைக்ககூடிய தன்மை இதனை மிகவும் பொதுவான கலைச் செயல்களில் ஒன்றாக உருவாக்கியுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. www.sbctc.edu (adapted). "Module 6: Media for 2-D Art". Saylor.org. பார்த்த நாள் 2 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைதல்&oldid=2444009" இருந்து மீள்விக்கப்பட்டது