வருவாய்க் கோட்ட அதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசில் மாவட்ட வருவாய்ப் பணிகளைக் கவனிப்பதற்காக நிர்வாக வசதிக்கேற்ப வருவாய்க் கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வருவாய்க் கோட்ட தலைமை அலுவலராக வருவாய்க் கோட்ட அதிகாரி நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்றவர் வருவாய்க் கோட்ட அதிகாரி என்கிற பெயரிலும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தேர்வு பெற்றவர்கள் துணை ஆட்சியாளர் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.

வருவாய்க் கோட்ட அதிகாரி பணிகள்[தொகு]

  • வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
  • மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
  • மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.

இதையும் பார்க்க[தொகு]

மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு

வருவாய்த்துறை இணையதளம்[தொகு]