வரலாறு (வலைத்தளம்)
Appearance
வலைத்தள வகை | வரலாறு |
---|---|
வெளியீடு | 2004 |
தற்போதைய நிலை | செயற்படுகிறது |
உரலி | www.varalaaru.com/ |
வரலாறு வலைத்தளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் வரலாற்றை உரிய முறையில் ஆவணப்படுத்தி, இணைய வழி பகிர முன்னெடுக்கப்படும் ஒரு தன்னார்வத் திட்டம் ஆகும். இது கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆர்வம் உள்ளோரின் ஒரு இணையக் குழுவாகத் தொடங்கியது. அந்த வரலாற்றுப் புதினத்தில் விபரிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதாக தொடங்கிய வரலாறு.காம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுகிறது. நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் தலையங்கங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது.