வனேடியம் ஈராக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள் | |
---|---|
14259-82-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
FO2V | |
வாய்ப்பாட்டு எடை | 101.94 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு நிற திண்மம் |
அடர்த்தி | 3.41 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம் ஈராக்சைடு புளோரைடு (Vanadium dioxide fluoride) VO2F. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் எதிரிணைக் காந்தப் பண்பு கொண்ட திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. இரும்பு(III) புளோரைடு சேர்மம் ஏற்றுக் கொண்டுள்ள அதே படிகக் கட்டமைப்பையே வனேடியம் ஈராக்சைடு புளோரைடும் ஏற்றுக் கொள்கிறது. இக்கட்டமைப்பில் எண்முக உலோக மையங்கள் ஆக்சைடு மற்றும் புளோரைடு ஈந்தணைவிகளுடன் இரட்டைப்பாலம் அமைக்கின்றன.
தயாரிப்பு
[தொகு]வனேடியம் பெண்டாக்சைடுடன் வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு வினைபுரிவதால் வனேடியம் ஈராக்சைடு புளோரைடு உருவாகிறது.:[1]
- V2O5 + VOF3 → 3VO2F
எக்சாமெத்தில் இருசிலாக்சேனைப் பயன்படுத்தி தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்:[2]
- (CH3)3SiOSi(CH3)3 + VOF3 → VO2F + 2 (CH3)3SiF
வினைகள்
[தொகு]வேறு சில தாண்டல் உலோக ஆக்சிபுளோரைடுகளைப் போலவே வனேடியம் ஈராக்சைடு புளோரைடும் இலூயிசு அமிலங்களுடன் வினைபுரிந்து 1:2 கூட்டுவிளைபொருள்களைக் கொடுக்கிறது.
மஞ்சள் பிசு(பிரிடின்) வழிப்பெறுதியான VO2F(NC5H5)2 சேர்மத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.[2]
மின்கலன்களில் நேர்மின் வாயாகப் பயன்படுத்தவும் வனேடியம் ஈராக்சைடு புளோரைடு ஆராயப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pérez-Flores, Juan Carlos; Villamor, Raquel; Ávila-Brande, David; Gallardo Amores, José M.; Morán, Emilio; Kuhn, Alois; García-Alvarado, Flaviano (2015). "VO2F: A new transition metal oxyfluoride with high specific capacity for Li ion batteries". Journal of Materials Chemistry A 3 (41): 20508–20515. doi:10.1039/C5TA05434F.
- ↑ 2.0 2.1 Davis, Martin F.; Jura, Marek; Leung, Alethea; Levason, William; Littlefield, Benjamin; Reid, Gillian; Webster, Michael (2008). "Synthesis, Chemistry and Structures of Complexes of the Dioxovanadium(v) Halides VO2F and VO2Cl". Dalton Transactions (44): 6265–6273. doi:10.1039/b811422f. பப்மெட்:18985260.
- ↑ Kuhn, Alois; Plews, Michael R.; Pérez-Flores, Juan Carlos; Fauth, François; Hoelzel, Markus; Cabana, Jordi; García-Alvarado, Flaviano (2020). "Redox Chemistry and Reversible Structural Changes in Rhombohedral VO2F Cathode during Li Intercalation". Inorganic Chemistry 59 (14): 10048–10058. doi:10.1021/acs.inorgchem.0c01197. பப்மெட்:32589405.