உள்ளடக்கத்துக்குச் செல்

வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம்
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம்
கண்ணோட்டம்
நிலைசெயல்பாடுகிறது
உரிமையாளர்இந்திய இரயில்வே
முனையங்கள்
  • பாலக்காடு சந்திப்பு
  • பொள்ளாச்சி சந்திப்பு
சேவை
சுழலிருப்புWAP4, WDM2, WDG3, WDP3, WDM3
வரலாறு
திறக்கப்பட்டது1898
தொழில்நுட்பம்
தண்டவாளங்களின் எண்ணிக்கை1
தட அளவி5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை
பழைய அளவு1,676 mm (5 ft 6 in) Broad gauge and 1,000 mm (3 ft 3 38 in) metre gauge dual gauge (between Palakkad Junction and Palakkad Town Railway Station)
1,000 mm (3 ft 3 38 in) (between Palakkad Town Railway Station and Pollachi Junction)
மின்மயமாக்கல்பகுதி மின்மயம்

வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம் (Vadakannikaapuram railway station) என்பது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையை உள்ள ஒரு கிளைப் பாதையாகும்.[1] இது பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது.

வரலாறு

[தொகு]

வடகன்னிகாபுரத்தில் 1898 இல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகர தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையான மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்தப் பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] முன்பு இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டுவந்த ஐந்து விரைவு வண்டிகள் பின்னர் நிற்காமல் சென்றன. ஆனால் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் தொடருந்து மட்டும் இங்கு நிறுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடருந்து நிலையத்தை தெற்கு இரயில்வே மூட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shaji, K.A. (21 April 2015). "Palakkad–Pollachi line gauge conversion over". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/palakkadpollachi-line-gauge-conversion-over/article7124560.ece. 
  2. "Indian Railways Living Atlas — India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  3. 3.0 3.1 "CRS completes inspection of Pollachi–Palakkad BG line". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  4. "Pollachi – Palakkad BG line cleared for passenger train services". The Hindu: Mobile Edition. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  5. "பயணிகள் குறைந்ததால் எம்ஜிஆரின் சொந்த ஊரில் மூடப்படும் ரயில் நிலையம் @ கேரளா". Hindu Tamil Thisai. 2024-10-14. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.