வசுந்தரா துரைசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வசுந்தரா துரைசுவாமி (Vasundhara Doraswamy) (பிறப்பு 1949) இவர் இந்தியாவிலுள்ள மைசூரில் அமைந்துள்ள வசுந்தரா நிகழ்த்து கலை மையத்தின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். மேலும், இவர் ஒரு திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞரும், நடன இயக்குனரும் மற்றும் மரியாதைக்குரிய குருவும் ஆவார். இவர் கடந்த ஆறு தசாப்தங்களாக மிக உயர்ந்த மட்டத்தில் கலை வடிவத்திற்கு பங்களிப்பு செய்துள்ளார். அஷ்டாங்க வின்யாச யோகாவின் ஒழுக்கத்தில் மறைந்த சிறீ பட்டாபி ஜோயிசின் [1] முன்னோடி சீடர்களில் ஒருவரான இவர், வசுந்தரா நாட்டியத்தில் தனது சொந்த பாணியில் துணை களத்தை உருவாக்கியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வசுந்தரா, தெற்கு கனராவில் (கர்நாடகா) உள்ள மூடபித்ரியில் பி. நாகராஜ் மற்றும் திருமதி. வரதா தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். வசுந்தரா, முரளிதர் ராவின் வழிகாட்டுதலின் பேரில் தனது 4வது வயதில் பரதநாட்டியத்தில் அறிமுகமானார் [2] மாநில அளவிலான போட்டியில், தனது 5வது வயதில் தங்கப்பதக்கம் வென்றார். இது இவரது திறனை வெளிச்சம் போட்டுக் காட்டியது மற்றும் இவரது குருவின் பாத்திரத்தில் தொடர்ந்த பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவி மறைந்த சிறீ இராஜரத்தினம் பிள்ளையின் மேற்பார்வையைத் தேட இவரது பெற்றோரைத் தூண்டியது. வசுந்தரா, தனது அர்ப்பணிப்பு பயிற்சியின் மூலம் கர்நாடக இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட வித்வத் தேர்வில் முதல் இடத்தைப் பெற்று தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார். [3] இவர் மறைந்த சிறீ எச்.எஸ். துரைசுவாமி என்பவரை மணந்தார். தற்போது, ஆத்திரேலியாவில் வசிக்கின்ற தனது மகன் மற்றும் மருமகள் மேகலா கிராசவேவுடன் தனது பாரம்பரியத்தை தொடர்கிறார். மேகலா கிராசாவே 'ஆர்ட் ஆஃப் வின்யாசா' என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு இவர் மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வத்துடனும், கலை வடிவத்தில் அர்ப்பணிப்புடனும் நடனம் கற்பிக்கிறார்.

தொழில்[தொகு]

1988 ஆம் ஆண்டில் வசுந்தரா யோகாவிற்கும் பரதநாட்டியத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து தனது ஆய்வுக்காக [4] முனைவர் பட்டம் பெற்றார்.   அவர் நாட்டுப்புறவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் 'டாங்-டா' மற்றும்' களரிப்பயிற்று' [5] ஆகிய தற்காப்புக் கலைகளின் முழுமையான நிபுணராக உள்ளார். இது நடனத்திற்கான பல்வகை அணுகுமுறைக்கான இவரது தேடலை உறுதிப்படுத்துகிறது [6] முனைவர் வசுந்தரா யோகா மற்றும் நடனத்தின் தொடர்பு பற்றிய ஒரு கட்டுரையை "நாட்டிய யோகா தரிசனம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். [7]

நாட்டியம்[தொகு]

இவரது நடனக் காட்சிகளைப் பொறுத்தவரை, `பாஞ்சாலி` யட்சகானா இசையை (கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த நாட்டுப்புற இசையின் ஒரு வடிவம்) பரதநாட்டியத்திற்கு மாற்றியமைத்ததற்காக குறிப்பிடப்பட்டுள்ளது. [6] மேலும், இவரது தனி தயாரிப்புகளான, கங்கா லகரி, அம்பே, தாட்சாயணி, பாஞ்சாலி, [8] சகுந்த குஞ்சனா (உதயவர மாதவ ஆச்சார்யாவின் இலக்கிய தலைசிறந்த படைப்புகள்) மற்றும் இப்போது ஜோதி சங்கரின் சாஸ்திர திரௌபதி போன்ற தனிப்பாடல்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. [9]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

முனைவர் வசுந்தராவுக்கு "நாட்டிய ராணி சாந்தலா" என்ற விருது வழங்கப்பட்டது. இது, கர்நாடக மாநில அரசால் நடனத்திற்காக அளிக்கப்படும் மிக உயர்ந்த மாநில விருது ஆகும். [10] இராஜ்யோத்சவா விருதும் வழங்கப்பட்டது. இன்றுவரை கர்நாடக சங்க நிருத்யா அகாதமியின் மதிப்புமிக்க விருதான "கர்நாடக கலா திலக்" என்ற விருதைப் பெற்ற இளையவரும் ஆவார். மேலும் உடுப்பி சிறீ கிருட்டிணா மடத்தில் இருந்து "ஆஸ்தானா நிருத்ய ரத்னா" பெற்ற ஒரே வெற்றியாளரரும் இவராவார். இந்தியாவின் தூர்தர்ஷன் தொலைக்காட்சிமூலம் இவருக்கு "சந்தனா விருது" வழங்கப்பட்டது. பத்மபூசண் சரோஜா வைத்யநாதன் என்பவர் மூலம் ஸ்ரேஷ்டா கலா பிரச்சாரக் என்ற விருதும், [11] பத்மவிபூசண் சிறீ பாலமுரளி கிருட்டிணாவிடமிருந்து "கலா விபஞ்சி" என்ற விருதும், ஆஸ்திரேலியாவிலிருந்து நாட்டிய ஜோதி மற்றும் அமெரிக்காவின் மில்லினியம் விருது போன்ற விருதுகள் இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவவை. [12]  

இவர் தூர்தர்ஷனில் ஏ-தர கலைஞர் ஆவார். [13]

இவர், 137 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2500 பார்வையாளர்களுக்கு முன்பாக யுனெஸ்கோவின் அனுசரணையில் பாரிஸில் நடைபெறும் 'உலக அமைதி' மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். [14]

பயிற்சி[தொகு]

உலகளாவிய சுற்றுப்பயண நடனக் கலைஞரான முனைவர் வசுந்தரா பல்வேறு நாடுகளில் பரதநாட்டியம் மற்றும் யோகாவில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். [15] இவர் இங்கிலாந்தில் பாரதிய வித்யா பவனுக்காக கோடைகால முகாம்களை நடத்தியுள்ளார். இவர் செக் குடியரசு, போலந்து, பிரான்ஸ், [16] ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்கில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். [17] வசுந்தராவின் தற்போதைய சுற்றுப்பயணங்கள் முதன்மையாக அமெரிக்கா, சிங்கப்பூர், பாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டுள்ளது. [18] [19] வசுந்தரா அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் [20] வருகை தரும் விருந்தினர் பேராசிரியராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இவர் ஒவ்வொரு கோடையிலும் லூயிவில்லை தனது இல்லமாக மாற்றியுள்ளார். மேலும் லூயிவில்லின் கலைத்துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரித்து 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூயிவில் நகரத்தந்தையால் "லூயிவில்லின் கௌரவ குடிமகன்" மற்றும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" இவருக்கு வழங்கப்பட்டது. . [21]

குறிப்புகள்[தொகு]

  1. "The sacred framework". http://www.thehindu.com/features/friday-review/the-sacred-framework/article8077516.ece. 
  2. Kamath, Ganesh. "Moodbidri's grand old building that served as court slinking into oblivion". daijiworld.
  3. Cavale, Sangeetha. "Yoga and the energy of dance". Times of India.
  4. Malini, Nair. "Fit to dance". Times of India.
  5. Kumar, Sujit Chandra. "When the body becomes all eyes". DC.
  6. 6.0 6.1 "Tapping yoga for creativity". The Hindu Newspaper.
  7. "An Invaluable treasure for Classical Dance". Big News Live.
  8. Probal, Gupta. "Aesthetic innovation within the traditional boundary".
  9. "Kshatra Draupadi - leaves audiences in awe".
  10. "Kannada Being Suppressed: URA". Indian Express. http://www.newindianexpress.com/cities/bengaluru/Kannada-Being-Suppressed-URA/2014/05/24/article2242461.ece. பார்த்த நாள்: 24 May 2014. 
  11. "‘Shreshta Kala Pracharak’ award to Vasundhara". Bangalore First. http://www.bangalorefirst.in/?p=4815. பார்த்த நாள்: 21 August 2016. 
  12. Ganga, Madappa. "attendance Annual Dance Awards". Alliance Française de Bangalore. http://bangalore.citizenmatters.in/events/attendance-annual-dance-awards. பார்த்த நாள்: 30 November 2014. 
  13. Nathan, Archana. "The sacred framework". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/the-sacred-framework/article8077516.ece. பார்த்த நாள்: 21 August 2016. 
  14. Paul, George. "VASUNDHARA MAKES HISTORY BY PERFORMING AT THE UNESCO".
  15. Dr, Krishnan. "Classical Bharatanatyam Dance Performance in Birmingham by Vasundhara Doraswamy". Parasi Herald.
  16. Vasundhara, Filliozat. Journée du Sanskrit. http://mj.guezennec.free.fr/wp-content/uploads/2015/10/journee-sanskrit.pdf. பார்த்த நாள்: 9 September 2016. 
  17. "ICCR Programmes". Indian Council for Cultural Relations (1 September 1998).
  18. Paritosh, Parasher. "Garba comes to Australia".
  19. "Mindfulness Practices for the Academic with Guru Dr. Vasundahra Doraswamy".
  20. "Dr. Vasundhara awarded Hon. Citizenship of Louisville, USA". http://www.bangalorefirst.in/?p=2165. பார்த்த நாள்: 3 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_துரைசுவாமி&oldid=2917560" இருந்து மீள்விக்கப்பட்டது