உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்தி முசும்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தி முசும்தார் (ஆங்கிலம்: Vasanti Muzumdar; தேவநாகரி: वासंती मुझुमदार) (1939-2003) என்பவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி எழுத்தாளர் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்

[தொகு]

வசந்தி 1939ஆம் ஆண்டு மகாராட்டிராவின் காரத்தில் பிறந்தார். இவர் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற புனேவில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் படித்தார். திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கிரந்தலி

[தொகு]

மகாராட்டிராவில் பல்வேறு வழிகளில் புத்தகங்களை வெளியிடுவதையும் அறிவைப் பரப்புவதையும் இலக்காகக் கொண்ட கிரந்தலி (ग्रंताली) நிறுவனத்தை நிறுவுவதில் முசும்தார் முக்கிய பங்கு வகித்தார்.

இலக்கியப் பணி

[தொகு]

கவிதைத் தொகுப்புகள்

[தொகு]
  • சஹேலா ரே (सहेला रे)[2]
  • சனேஹி (सनेही)

கட்டுரைத் தொகுப்புகள்

[தொகு]

வசந்தி முசும்தார், நதிகதி (नदीकाठी) மற்றும் ஜலால் (झळाळ) என இரு கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

முசும்தாரின் படைப்புகள் தமானி புரசுகார் (தமானி விருது), சானே குருஜி புரசுகார் (சானேகுருஜி புரசுகார்), பஹினபாய் சௌதாரி புரசுகார் (बहिनदारी पुरस्कार), மகாராட்டிரா மாநில இலக்கிய விருதுகள் உள்ளிட்ட சில விருதுகளைப் பெற்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_முசும்தார்&oldid=3685651" இலிருந்து மீள்விக்கப்பட்டது