கராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கராத்
நகரம்
கராத்
கராத்
கராத் is located in மகாராட்டிரம்
கராத்
கராத்
மகாராட்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் கராத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°17′06″N 74°11′02″E / 17.285°N 74.184°E / 17.285; 74.184ஆள்கூறுகள்: 17°17′06″N 74°11′02″E / 17.285°N 74.184°E / 17.285; 74.184
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
[[[மாவட்டம் (இந்தியா) |மாவட்டம்]]சதாரா
அரசு
 • நிர்வாகம்நகராட்சி மன்றம்
ஏற்றம்566 m (1,857 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்53,879
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்415110
தொலைபேசி குறியீடு+91-2164
வாகனப் பதிவுMH-50

கராத் (Karad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் கிருஷ்ணா ஆறும், கொய்னா ஆறும் கலக்குமிடத்தில் அமைந்த நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மும்பையிலிருந்து 180 கி மீ., மற்றும் புனேவிலிருந்து 159 கி மீ தொலைவில் உள்ளது. மலைவாழிடங்களான மஹாபலீஸ்வர் மற்றும் பஞ்ச்கனி, கராத் நகரத்திலிருந்து 100 கி மீ தொலைவில் உள்ளது. இப்பகுதியில் கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 566 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11,395 வீடுகள் கொண்ட கராத் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 53,879 ஆகும். அதில் ஆண்கள் 27,134 மற்றும் 26,745 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (10.10%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.05% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 66.72%, இசுலாமியர் 23.00%, பௌத்தர்கள் 5.45% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[1] இந்நகரத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

சென்னையிலிருந்து மும்பை வழியாக புது தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48 கராத் நகரத்தின் வழியாகச் செல்கிறது.

தொடருந்து நிலையம்[தொகு]

கராத் நகரத்திற்கு 4 கி மீ தொலைவில் உள்ள ஒகலேவாடியில் மும்பை, கோலாப்பூர், பெங்களூர் நகரங்களை இணைக்கு தொடருந்து நிலையம் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

கரும்பு வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்பட்டும் கரும்புச் சர்க்கரை புகழ்பெற்றது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கராத்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கராத்&oldid=3030848" இருந்து மீள்விக்கப்பட்டது