வசந்தி தேவி (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தி தேவி
2016இல் விருதுடன் வசந்தி தேவி
பிறப்பு1960கள்
உத்தராகண்டம்
தேசியம் இந்தியா
கல்விஇலட்சுமி ஆசிரமம்
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர்
அறியப்படுவதுமரங்களை காப்பதில் முனைப்புடன் இருப்பவர்
வாழ்க்கைத்
துணை
இவரது சிறு வயதிலேயே இறந்து போனார்

வசந்தி தேவி (Basanti Devi ) ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர். உத்தராகண்டம் மாநிலத்தில் மரங்களை பாதுகாப்பதில் இவரது இந்த அக்கறையைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருதினை 2016 இல் வழங்கியது.

வாழ்க்கை[தொகு]

காந்தியவாதியான சர்ளா பென் இளம் பெண்களுக்காக கௌசனி என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலட்சுமி ஆசிரமத்தில் தனது இளமைக் காலத்தைக் கழித்தார். [1] [2] தனது பன்னிரெண்டு வயதில் திருமணமான இவர், 1980ஆம் ஆண்டில் கணவர் இறந்தபின், ஆசிரமத்திலேயேத் தங்கினார். திருமணத்திற்கு முன்பே பள்ளிக்குச் சென்றிருந்த இவரால் மட்டுமே படிக்க முடிந்தது. ஆசிரமத்தில் இவர் தனது மேல்நிலைக்கல்வியை முடித்தப்பின் தொடர்ந்து படித்து வந்தார். மேலும் கற்பிப்பதில் ஆர்வம் காட்டினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலராகி உத்தராகண்டம் மாநிலத்தில் மரங்களை பாதுகாப்பதில் அக்கறை கொண்டு பணியாற்றி வருகிறார். [3]

பணிகள்[தொகு]

உத்தரகண்டில் கோசி நதி ஒரு முக்கியமான வளமாகும். [4] பீகாரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு இந்த நதியே காரணமாகும். இது பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தையும் ஒரு மில்லியன் மக்களையும் பாதிக்கிறது. [5] தற்போதைய விகிதத்தில் மரங்களை வெட்டுவது தொடர்ந்தால் பத்தாணு காலத்துக்குள் நதி இருக்காது என்று மதிப்பிட்ட ஒரு கட்டுரையை தேவி படித்தார். இதைப் பற்றி உள்ளூர் பெண்களிடம் பேசினார் . இது அவர்களின் காடு என்றும், அவர்களின் நிலம் என்று விளக்கி, நதி காய்ந்தவுடன் அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டார். இது மக்களை நம்ப வைக்கத் தொடங்கியது. [4]

இவரது தொடர் முயற்சிகளினால், கிராமவாசிகளும் மர நிறுவனங்களும் புதிய விறகுகளை வெட்டுவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டனர். கிராம மக்கள், தங்களது சமையலுக்கு பழைய மரத்தை மட்டுமே எரிப்பதாக ஒப்புக்கொண்டனர். [4] தேவி சமூக குழுக்களை ஒழுங்கமைத்தார். [3] கிராம மக்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க வேண்டியது அவசியத்தை உணர்ந்தனர். இதன் விளைவுகள் பார்ப்பதற்கு மெதுவாக இருந்தாலும், கோடையிலும் வறண்ட நீரூற்றுகள் தற்போது நீர் நிரம்பி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓக், ரோடோடென்ட்ரான், மைரிகா எசுலெண்டா தாவரங்கள் போன்ற பரந்த இலை மரங்களுடன் காடுகள் அதிக பன்முகத்தன்மையைக் காட்டுகின்றன.

விருதுகள்[தொகு]

மார்ச் 2016 இல்புதுடெல்லியுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருதை வழங்கினார். [6] பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான மேனகா காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Basanti and the Kosi: How one woman revitalized a watershed in Uttarakhand". www.indiawaterportal.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  2. "About the Ashram – Friends of Lakshmi Ashram" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  3. 3.0 3.1 "President Pranab Mukherjee presented 2015 Nari Shakti awards". Jagranjosh.com. 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  4. 4.0 4.1 4.2 "Basanti and the Kosi: How one woman revitalized a watershed in Uttarakhand". www.indiawaterportal.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  5. "Flood devastation in Bihar state" (in en-GB). 2008-08-25. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7580587.stm. 
  6. Mar 8, Himanshi Dhawan |; 2016; Ist, 21:59. "Nari Shakti awards for women achievers | Delhi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)