வசந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தகுமார் தமிழின் முக்கியமான நூல்வெளியீட்டாளார், பிரதிமேம்படுத்துநர். இருபதாண்டுகளாக தமிழினி பதிப்பகம், யுனைட்டட் ரைட்டர்ஸ் என்ற இரு பதிப்பகங்களை நடத்தி வருகிறார். தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகளான சு. வேணுகோபால், கண்மணி குணசேகரன், ஜோ டி குரூஸ், சு. வெஙகடேசன், உமா மகேஸ்வரி, ஜெ. பிரான்ஸிஸ் கிருபா போன்றோரின் ஆக்கங்களை அறிமுகம்செய்து வெளியிட்டு வருகிறது தமிழினி. முக்கியமான ஆய்வுநூல்களையும் வெளியிட்டுள்ளது. வசந்தகுமார் ’தமிழினி’ சிற்றிதழின் ஆசிரியர். இவ்விதழ் பழந்தமிழ் ஆய்வுகள், சூழியல் ஆய்வுகள், தத்துவ ஆய்வுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தகுமார்&oldid=627493" இருந்து மீள்விக்கப்பட்டது