வங்கதேச சில்வண்டுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்கதேச சில்வண்டுத் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
மினர்வராயா
இனம்:
மி. அசுமதி
இருசொற் பெயரீடு
மினர்வராயா அசுமதி
கவ்லாதர், 2011
வேறு பெயர்கள்

பெஜெர்வராயா அசுமதி கவ்லாதர், 2011

வங்கதேச சில்வண்டுத் தவளை (Minervarya asmati-மினர்வர்யா அசுமதி) என்பது வங்காளதேசத்தின் சிட்டகொங் மற்றும் டாக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இதன் வகை இடம் சிட்டகாங் பல்கலைக்கழக வளாகம் ஆகும்.[1] இத்தவளை 2011இல் முகமது சஜித் கவ்லாதர் என்பவரால் விவரிக்கப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

இந்த சிற்றினத்தின் ஆண் தவளையின் உடல் நீளம் 29.1 மி.மீ முதல் 30.00 மி.மீ. வரையிலும் பெண் தவளையின் உடல் நீளம் 33.4 மி.மீ வரையிலும் காணப்படும். இதன் அடிப்படை நிறம் ஆலிவ் பச்சை முதல் பச்சை கலந்த பழுப்பு வரை மாறுபடும். ஆண் தவளையில் பட்டாம்பூச்சி வடிவ குரல் குறியீடு உள்ளது.[3]

நடத்தை[தொகு]

இத்தவளை இனங்கள் தற்காலிக குளங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் மினர்வர்யா அசுமதி தவளையின் ஒற்றை அல்லது சில ஆண் தவளை ஓசையினை விடக் கூட்டு ஓசையினையே பெண் தவளைகள் விரும்புகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2014). "Zakerana asmati (Howlader, 2011)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014.
  2. "Success story of a frog prince: writes country’s name afresh". bdnews24.com. 2 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104085614/http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=ec49e5ad761d1fef16cf05e64b429224&nttl=0202201363416. 
  3. 3.0 3.1 Howlader, M.S.A. (2011). "A new species of Fejervarya (Anura: Dicroglossidae) from Bangladesh". Zootaxa 2761: 41–50. http://www.mapress.com/zootaxa/2011/2/zt02761p050.pdf.