உள்ளடக்கத்துக்குச் செல்

வகையுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகையுளி என்பது ஒரு செய்யுளிலக்கணக் குறியீடு.

செய்யுளில் தளை தட்டுப்படாமல் இருக்கச் ஒரே சொல்லைப் பிரித்துச் சீர்நிலை ஆக்கிக்கொள்ளும் முறைமைக்கு வகையுளி என்று பெயர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [1] [2]

படரும் பனைஈன்ற மாவும் சுடர்இழை
நல்கியாள் நல்கி யவை [3] [4]

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு [5] வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினோன்று - பன்னி
ரண்டுபதின் மூன்றுபதின் நான்குபதி னைந்துபதி
னாறுபதி னேழுபதி னெட்டு. [6] [7]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. திருக்குறள் 10
  2. 'இறைவனடி சேராதார்' என்பது இங்கு உள்ளபடி இந்தக் குறள் வெண்பாவில் வகையுளி செய்யப்பட்டுள்ளது.
  3. நல்கியவை என்னும் சொல் வகையுளி செய்யப்பட்டுள்ளது.
  4. கலித்தொகை 138-12
  5. ஆறு என்னும் குற்றியலுகரம் இங்கு முற்றியலுகரமாக எடுத்தாளப்பட்டுள்ளது
  6. காளமேகப் புலவர் பாட்டு
  7. எண்களின் பெயர்கள் வகையுளி செய்யப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகையுளி&oldid=1411857" இலிருந்து மீள்விக்கப்பட்டது