உள்ளடக்கத்துக்குச் செல்

லோகாரு கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோகாரு கோட்டை
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் [1]
வகைகோட்டை[1]
கட்டிடக்கலை பாணிஇராஜபுத்திரக் கட்டிடக்கலை, முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானிய காலனியக் கட்டிடக்கலை[1]
இடம்லோகாரு, அரியானா[1]
நாடுஇந்தியா
கட்டுமான ஆரம்பம்கி.பி.1570[1]

லோகாரு கோட்டை (Loharu Fort), 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள லோகாரு நகரில் உள்ள அரசால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச்சின்னமாகும்.[1][2] கோட்டை, அரியானா- இராசத்தான் எல்லையின் இருபுறமும் மணல் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு இடையேயான செகாவதி பகுதியின் ஒரு பகுதியாகும்.

வரலாறு[தொகு]

கி.பி 1570 இல் நிறுவப்பட்ட பிறகு, கோட்டையின் கட்டுப்பாடு செகாவதி ஆட்சியாளர்களிடமிருந்து அல்வார் இராசியம் வசம் சென்றது. மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இசுலாமிய நவாபுகள் வசம் லோகாரு இராச்சியம் சென்றது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற லோகாரு இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இறுதியாக இராச்சியத்தின் நவாப் அகமது பக்ஷ் கான் இதனை 1971 இல் அரியானா அரசாங்கத்திற்கு விற்றார்.[1]

2021 ஆம் ஆண்டில், கோட்டைக்கு மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் அந்தஸ்து வழங்கப்படும் என்று அரியானா அரசு அறிவித்தது.[1]

கோட்டை கிட்டத்தட்ட எட்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 1570 இல் கட்டப்பட்ட முந்தைய செகாவதி மண் கோட்டைக்குப் பதிலாக தற்போதைய கோட்டை 1803 இல் நவாப் அகமது பக்ஷ் கானால் கட்டப்பட்டது. தற்போதைய கோட்டை இராஜபுத்திரர், முகலாய மற்றும் பிரித்தானிய காலனித்துவ கட்டிடக்கலையின் மூன்று பாணிகளை ஒருங்கிணைக்கிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகாரு_கோட்டை&oldid=3925670" இலிருந்து மீள்விக்கப்பட்டது