உள்ளடக்கத்துக்குச் செல்

லைட்காயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லைட்காயின் (Litecoin, எண்ணிம நாணயக் குறியீடு: LTC அல்லது Ł[1]) ஒரு சமவுரிமைப் பகிர்வு பிணைய முறையில் இயங்கும் எண்ணிம நாணயம் ஆகும். இது ஒரு திறந்த மூல திட்டம், எம்ஐடி/எக்சு11 உரிமத்தில் வெளியடப்பட்டுள்ளது.[2] இந்நாணயத்தின் உருவாக்கமும், பரிமாற்றமும் எந்த ஒரு உரிமையாளருமின்றி, திறந்த மூல குறியாக்கவியல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.[3] லைட்காயின், அக்டோபர் 2011 அன்று பிட்காயினின் மாதிரி கொண்டு தயாரிக்கப்பட்டது, இது ஒரு ஆல்ட்காயினும் கூட.[4] தொழில்நுட்பத்தில் இதற்கும் பிட்காயினுக்கும் வேறுபாடு இல்லை.

வரலாறு[தொகு]

லைட்காயின் அக்டோபர் 7, 2011 அன்று கிட் ஹப் தளத்தில் சார்லீ லீ என்னும் கூகிள் நிறுவன ஊழியரால் வெளியிடப்பட்டது, இவர் காயின்பேசு நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் இயக்குனரும் கூட.[5][6] அக்டோபர் 13, 2011 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.[7]

மே 2017-இல், லைட்காயின் எண்ணிம நாணயங்கள் மதிப்பில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்தது.[8] அதே மே மாதத்தில், 0.00000001 LTC நாணயத்தை சூரிக்கிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு 1 நொடிக்கும் குறைவான நேரத்தில் அனுப்ப முடிந்தது.[9]

உசாத்துணை[தொகு]

  1. "Litecoin charts". ltc-charts.com. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
  2. "Litecoin.org". litecoin.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
  3. Satoshi, Nakamoto. "Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System" (PDF). Bitcoin.org. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  4. "Ex-Googler Gives the World a Better Bitcoin" (in en-US). WIRED. https://www.wired.com/2013/08/litecoin/. 
  5. "Litecoin vs. Ethereum" (in en-US). http://www.perfecttrendsystem.com/litecoin-vs-ethereum. 
  6. "Litecoin founder Charlie Lee has sold all of his LTC" (in en-US). TechCrunch. https://techcrunch.com/2017/12/20/litecoin-charlie-lee-conflict-of-interest/. 
  7. "Block hashing algorithm". Archived from the original on 2017-08-10.
  8. Blockstream [Blockstream] (10 May 2017). "Blockstream's Christian Decker @Snyke completes first Lightning network payment on Litecoin. See. Blog post soon!" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. Russell, Rusty. "Lightning on Litecoin". Blockstream. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைட்காயின்&oldid=3588093" இலிருந்து மீள்விக்கப்பட்டது