லேடீஸ் அன்ட்ஜென்டில்வுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேடீஸ் அன்ட்ஜென்டில்வுமன்
இயக்கம்மாலினி ஜீவரத்னம் [1]
தயாரிப்புபா.ரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ்
இசைஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவுவிபின் குமார் வாமெர்[2]
வெளியீடுசனவரி 2017 (2017-01)(சென்னை ரெயின்போ)
21 சனவரி 2018 (India)
ஓட்டம்47 நிமிடங்கள்[3]
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், தமிழ்

லேடீஸ் அன்ட் ஜென்டில்வுமன் (Ladies and Gentlewomen ) இது தமிழ் மொழியில் வந்துள்ள ஆவணப்படமாகும் மாலினி ஜீவரத்னம் இயக்கிய இதனை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.[4]. ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் தற்கொலை போன்றவற்றை பேசுகிறது.[5] இதில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கான பாடல் ஒன்றை தந்துள்ளார்.[6] மேலும் தமயந்தி, குட்டி ரேவதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[7][8]

கதை[தொகு]

திஜா மற்றும் பிஜா ஆகிய இருவரின் வாழ்க்கையை இந்த ஆவணப் படம் விவரிக்கிறது, ராஜஸ்தானில் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் கதையையும், தமிழ்நாட்டின் வாய்வழிக்கதையாக சொல்லப்பட்டு வந்த பாப்பாத்தி மற்றும் கருப்பாயி ஆகியவர்களைப் பற்றி பேசுகிறது.[9]. சமூகத்தில் வாழும் சமூகச் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ,வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களில் அகனள், அகனன், ஈரர், திருனர் போன்றோர் உள்ளடங்கியிருப்பார்கள் [10] ஓரினச் சேர்க்கையாளர்களை ஆணவக் கொலைகளிலிருந்து தடுப்பதும், விந்தையான மனிதர்களாக அவர்களை பார்க்காமலிக்கச் செய்வதும், அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுப்பதுவுமே தனது முக்கிய நோக்கமென இயக்குனர் தெரிவித்திருந்தார்.[11][12]

தயாரிப்பு[தொகு]

ஓராண்டுக்கும் மேற்பட்டு இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு முடிவில் இப்படத்தை முடிக்க மூன்றாண்டுகள் ஆகி விட்டதென இயக்குனர் தெரிவித்திருந்தார். ஓரினச் சேர்க்கையாளர்களும் இறப்பும், அவர்களின் வேதனையும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பதே தனது முக்கிய குறிக்கோளாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.[13]. 85க்கும் மேற்பட்ட இது போன்ற விந்தையான பெண்களை தனது ஆராய்ச்சியில் சந்தித்ததாகவும், அவர்களில் பெரும்பாலோனோர் தங்களை வெளிப்படுத்திட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கிறார்.[10] 2017 சனவரி 8 அனறு சென்னையில் நடைபெற்ற ரெயின்போ திரைப்பட விழாவில் இது திரையிடப்பட்டது .[14]

விருதுகள்[தொகு]

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருதினை பெற்றது , புனே இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தகுதி பெற்றது. மேலும் உலக அளவில் பல பாராட்டுகளை இது பெற்றது.[7] இந்த ஆவணப்படம் ஏழு வெவ்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அதில் சிறந்த ஆவணப்படமாக மூன்று விருதுகளை பெற்றுள்ளது..[15] சென்னை இண்டர்நேஷ்னல் விந்தைத் திரைப்பட விழா, பெங்களூரு இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழா, ஹைதரபாத் இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழா போன்றவற்றில் இது பலரது பாராட்டையும் பெற்றது.[16]

2017 சென்னை ரெயின்போ திரைப்பட விழா[17]
  • வெற்றி: சிறந்த ஆவணப்படம்
2017 நார்வே தமிழ்த் திரைப்பட விழா
  • வெற்றி: சிறந்த ஆவணப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Shajini S R (1 Aug 2017). "LGBTQ art fest blurs boundaries, garners ovation". பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.
  2. https://www.imdb.com/name/nm6934933/?ref_=fn_al_nm_1
  3. Priya Menon (3 Dec 2016). "A rich fare for Chennai rainbow film fete". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  4. "from Chennai, an anthem for lesbian love". 2 April 2017.
  5. "When love is gay and sundry". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/2017/jul/28/when-love-is-gay-and-sundry-1634986--1.html. 
  6. "It ends with a hug". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
  7. 7.0 7.1 "Watch: This Tamil lesbian anthem is a challenge to all those who are illiberal about love". 7 April 2017.
  8. "Pa Ranjith launches 'Ladies and Gentlewomen', story of queen meets queen". The News Minute. 2018-01-17. https://www.thenewsminute.com/article/pa-ranjith-launches-ladies-and-gentlewomen-story-queen-meets-queen-74879. 
  9. "'Ladies And Gentlewomen' – Malini Jeevarathnam Helms A Documentary About Lesbian Relationships". Archived from the original on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  10. 10.0 10.1 Vijayta Lalwani (7 April 2017). "Malini Jeevarathnam – Bringing Lesbian Rights to the Fore". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  11. KaeLyn (9 April 2017). "Sunday Funday Is Swiping Left on LGBTQ Discrimination". பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.
  12. "Queer Film Festival brings 88 unusual works to city". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
  13. M Suganth (31 March 2017). "This Lesbian Anthem sings a tune of change".
  14. "3RD CHENNAI RAINBOW FILM FESTIVAL HELD FROM 4TH TO 8TH JAN". 13 January 2017.
  15. "Pushing boundaries: 88 films from 30 countries at Bengaluru Queer Film Festival". The News Minute. 2018-03-07. https://www.thenewsminute.com/article/pushing-boundaries-88-films-30-countries-bengaluru-queer-film-festival-77589. 
  16. "A queer carnival to remember" (in en). www.deccanchronicle.com/. 2017-09-12. https://deccanchronicle.com/lifestyle/viral-and-trending/120917/a-queer-carnival-to-remember.html. 
  17. "Celebrating queer pride". The Hindu. 27 July 2017. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.