லியோ தைராக்ஸின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(S)-2-Amino-3-[4-(4-hydroxy-3,5-diiodophenoxy)-3,5-diiodophenyl]propanoic acid
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் சிந்திராயிடு, இலெவாக்சில், தைராக்சு, இன்னும் பிற
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a682461
கட்டுப்பாட்டு உரிமத் தரவு EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link]US Daily Med:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை A(AU)
சட்டத் தகுதிநிலை Prescription Only (S4) (AU) ? (CA) ? (அமெரிக்கா)
வழிகள் வாய்வழி, ஊசிவழி
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 40-80%[1]
வளர்சிதைமாற்றம் ஈரல், சிறுநீரகங்கள், மூளை, தசைகள்
அரைவாழ்வுக்காலம் ca. 7 நாட்கள் ( hyperthyroidism 3–4 நாட்கள், hypothyroidism 9–10 நாட்கள்)
கழிவகற்றல் மலம், சிறுநீர்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 51-48-9 6106-07-6 ( இலெவோதைராக்சைன் சோடியம் ஐதரேற்று)
ATC குறியீடு H03AA01
பப்கெம் CID 5819
DrugBank DB00451
ChemSpider 5614
UNII Q51BO43MG4
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D08125
ChEBI [1]
ChEMBL CHEMBL1624
ஒத்தசொல்s 3,5,3′,5′-Tetraiodo-L-thyronine
வேதியியல் தரவு
வாய்பாடு C15

H11 Br{{{Br}}} I4 N O4  

  • InChI=1S/C15H11I4NO4/c16-8-4-7(5-9(17)13(8)21)24-14-10(18)1-6(2-11(14)19)3-12(20)15(22)23/h1-2,4-5,12,21H, 3,20H2, (H, 22,23)/t12-/m0/s1 Y
    Key:XUIIKFGFIJCVMT-LBPRGKRZSA-N
இயற்பியல் தரவு
உருகு நிலை 231–233 °C (448–451 °F) [3]
நீரில் கரைதிறன் சற்றே கரையும் (0.105 mg·mL−1 at 25 °C)[2] mg/mL (20 °C)

இலெவோதைராக்சைன் (Levothyroxine) என்பது L-தைராக்சைன் எனவும் வழங்கப்படும் தைராக்சைனின்(T4) செயற்கைத் தொகுப்பு வடிவமாகும்.[1][4] இது கேடயச் சுரப்புக்குறைக்கும் அதன் கடும்நிலையான மந்திப்புக் கோளாற்றுக்கும்(மென்மரப்புக்கும்) மருந்தாகப் பயன்படுகிறது.[1] இது சில கேடயச் சுரப்புப் புற்றுகளைத் தடுக்கவும் தீர்க்கவும் மருந்தாகிறது.[1] எடையிழப்புக்கு இது தீர்வன்று.[1] இலெவோதைராக்சைன் வாய்வழியாகவோ ஊசி வழியாகவோ தரப்படலாம்.[1] குறிப்பிட்ட மருந்தளவின் பெரும விளைவைப் பெற ஆறு வாரங்கள் பிடிக்கிறது.[1]

கூடுதல் மருந்தேற்பால் உருவாகும் பக்க விளைவுகளாக எடையிழப்பு, வெப்பத் தாங்குதிறச் சிக்கல், வியர்வை, பதற்றம், தூக்கமின்மை, நடுக்கம், வேகமான இதயத் துடிப்பு வீதம் ஆகியன ஏற்படலாம்.[1] அண்மையில் மாரடைப்பு வந்தவருக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.[1] கருவுற்ற காலப் பயன்பாடு பாதுகாப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[1] மருந்தளவு, குருதியில் உள்ள கேடயச் சுரப்பு தூண்டும் இசைமத்தை(இயக்குநீரை) (TSH) அளந்தும் T4 மட்டத்தைப் பொறுத்தும் முடிவு செய்யப்படுகிறது.[1] இதன் விளைவு பெரிதும் எந்த அளவுக்கு இது டிரைஅயடோதைரோனைனாக (T3 ஆக) மாற்றமுறுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது.[1]

1927 ஆம் ஆண்டில் இலெவோதைராக்சைன்ன் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இது உலக நலவாழ்வு நிறுவன இன்றியமையாத மருந்துகளின் பட்டியலில் உள்ளது. இது நலந்தரும் மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான மருந்து ஆகும். இது ஒரு பொதுவான மருந்தாக உள்ளது. வளரும் நாடுகளில் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்தின் மொத்த விலை 0.58 முதல் 12.28 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இதனால், அமெரிக்காவில் பொதுவாக ஒரு மாதத்துக்கு 25 டாலருக்கும் குறைவாகவே செலவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "Levothyroxine Sodium". The American Society of Health-System Pharmacists. Archived from the original on 21 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  2. வார்ப்புரு:DrugBank
  3. "Chemistry of Thyroxine: Constitution and Synthesis of Desiodo-Thyroxine". The Biochemical Journal 20 (2): 300–313. 1926. doi:10.1042/bj0200300. பப்மெட்:16743659. 
  4. (in en) Pharmacology for Women's Health. Jones & Bartlett Publishers. 2010. பக். 544. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781449658007. https://books.google.com/books?id=E9qVyrNPsBkC&pg=PA544. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. DrugBank DB00451
  2. Harington (1926). "Chemistry of Thyroxine: Constitution and Synthesis of Desiodo-Thyroxine". Biochem J. 20 (2): 300–313. PMC 1251714 Freely accessible. PubMed. doi:10.1042/bj0200300.
  3. "Levothyroxine Sodium". The American Society of Health-System Pharmacists. Retrieved 8 December 2016.
  4. King, Tekoa L.; Brucker, Mary C. (2010). Pharmacology for Women's Health. Jones & Bartlett Publishers. p. 544. ISBN 9781449658007.
  5. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Retrieved 8 December 2016.
  6. "Levothyroxine". International Drug Price Indicator Guide. Retrieved 8 December 2016.
  7. Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. p. 223. ISBN 9781284057560.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோ_தைராக்ஸின்&oldid=3777866" இலிருந்து மீள்விக்கப்பட்டது