லாக்டுலோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்டுலோசின் மூலக்கூறு அமைப்பு

லக்டுலோஸ் (/ˈlækt[invalid input: 'jʉ']lz/) ஒரு நீராற் பகுக்கவியலாத இரட்டைச் சர்க்கரை[1] இது மனிதக் குடலில் உறிஞ்சப்படாது. எனவே குடலில் உள்ள பாக்டீரியங்களால் இது நொதித்தலுக்குள்ளாகிறது. இதனால் உருவாகும் அமிலங்கள் அம்மோனியாவை அம்மோனியமாக மாற்றி குடலில் உறிஞ்சப்படாமல் தடுக்கின்றன. அத்தோடு மட்டுமன்றி அம்மோனியாவை உண்டாக்கக் கூடிய பாக்டீரியங்களையும் அமிலங்கள் அழித்து விடுகின்றன. இது கல்லீரல் செயலிழந்தவர்களுக்கு மிகப் பயனுள்ளதாகிறது.[2][3] ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்படும் போது புரதச் சிதைப்பின் இறுதி விளைபொருளான அம்மோனியாவை யூரியாவாக மாற்ற முடியாமல் போகிறது. இந்த அம்மோனியா நரம்பு மண்டலத்தைப்ப பாதிக்கிறது. ஆகவே கல்லீரல் செயலிழந்த நோயர்களின் உடலில் அம்மோனியா உருவாதலையும் குடலில் உறிஞ்சப்படுதலையும் தடுக்க வேண்டியது அவசியம்.

மருந்தியல்[தொகு]

10 மில்லி லிட்டர் லாக்டுலோஸ் ஒரு நாளைக்கு மூன்று வேளை தரப்பட வேண்டும். மலமிளக்கி விளைவு நன்கு தென்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டுலோஸ்&oldid=3520935" இருந்து மீள்விக்கப்பட்டது