லஹ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லஹ்தி (ஆங்கிலம் : Lahti ; பின்னிய மொழி உச்சரிப்பு: [ˈlɑxti] ; சுவீடிய மொழி: Lahtis ) பின்லாந்து நாட்டில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்த நகரம் நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.

லஹ்தி நகரம் பின்லாந்தின் பைஜான் தவாஸ்டியா (பைஜாட்-ஹோம்) பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் தலைநகர் ஹெல்சின்கியின் வடகிழக்கில் சுமார் 100 கிலோமீற்றர் (60 மைல்) வெசிஜார்வி ஏரியின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில், லஹ்தி என்ற பின்னிய மொழி வார்த்தையின் அர்த்தம் விரிகுடா என்பதாகும். லஹ்தி நகரம் வளர்ந்து வரும் பின்லாந்தின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாகும்.[1]

புவியியல்[தொகு]

காலநிலை[தொகு]

லஹ்தி நகரம் கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், ஈரப்பதமான கண்ட காலநிலை மற்றும் ஒரு சபார்க்டிக் காலநிலை ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையில் சரியாக அமைந்துள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Lahti Laune (1981–2010 normals)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 7.5
(45.5)
9.6
(49.3)
16.6
(61.9)
24.2
(75.6)
30.1
(86.2)
32.1
(89.8)
35.0
(95)
33.8
(92.8)
26.8
(80.2)
17.8
(64)
11.3
(52.3)
9.7
(49.5)
35
(95)
உயர் சராசரி °C (°F) -3.5
(25.7)
-3.5
(25.7)
1.6
(34.9)
8.6
(47.5)
16.0
(60.8)
19.9
(67.8)
22.7
(72.9)
20.4
(68.7)
14.4
(57.9)
7.8
(46)
1.6
(34.9)
-1.9
(28.6)
8.68
(47.62)
தினசரி சராசரி °C (°F) -6.7
(19.9)
-7.2
(19)
-2.7
(27.1)
2.9
(37.2)
9.9
(49.8)
14.2
(57.6)
17.0
(62.6)
15.2
(59.4)
9.9
(49.8)
4.6
(40.3)
-0.8
(30.6)
-4.7
(23.5)
4.3
(39.74)
தாழ் சராசரி °C (°F) -9.8
(14.4)
-10.8
(12.6)
-6.9
(19.6)
-1.5
(29.3)
3.7
(38.7)
8.4
(47.1)
11.3
(52.3)
9.9
(49.8)
5.4
(41.7)
1.4
(34.5)
-3.1
(26.4)
-7.6
(18.3)
0.03
(32.06)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.2
(-31.4)
-35.6
(-32.1)
-31.4
(-24.5)
-19.3
(-2.7)
-7.0
(19.4)
-2.6
(27.3)
1.5
(34.7)
-2.0
(28.4)
-8.4
(16.9)
-16.5
(2.3)
-23.8
(-10.8)
-33.1
(-27.6)
−35.6
(−32.1)
பொழிவு mm (inches) 48.2
(1.898)
34.3
(1.35)
35.1
(1.382)
28.1
(1.106)
42.6
(1.677)
64.5
(2.539)
77.2
(3.039)
75.3
(2.965)
58.4
(2.299)
65.5
(2.579)
58.4
(2.299)
50.1
(1.972)
637.7
(25.106)
சராசரி பொழிவு நாட்கள் 12.0 8.8 8.6 6.6 7.8 9.4 10.1 10.4 9.8 11.2 11.4 11.7 117.8
ஆதாரம்: Météo Climat [2][3]

கலாச்சாரம்[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய காங்கிரஸ் மற்றும் கச்சேரி மையமான சிபெலியஸ் கட்டிடம் கட்டப்பட்டது. சின்போனியா லஹ்தி என்பது பின்லாந்தின் மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒத்திசை இசைக்குழுக்களில் ஒன்றாகும்.

லஹ்தியின் வருடாந்திர இசை விழா நிகழ்ச்சியில் லஹ்தி ஒர்கன் விழா, சந்தை சதுக்கத்தின் ஜாஸ் திருவிழா மற்றும் சிபெலியஸ் விழா போன்ற நிகழ்வுகள் அடங்கும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று நிலவரப்படி லஹ்தியின் மக்கட் தொகை 118,885 காணப்பட்டது. சனத்தொகை அடிப்படையில் பின்லாந்தில் எட்டாவது பெரிய நகரமாக அமைந்தது. 2019 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 120,081 மக்கள் வசிக்கின்றனர்.[4]

பொருளாதாரம்[தொகு]

சுற்றியுள்ள நகராட்சிகளை உள்ளடக்கிய லஹ்தியின் பொருளாதார பகுதி பின்னிஷ்-சோவியத் வர்த்தகத்தின் சரிவு மற்றும் 1990 ஆண்டுகளின் முற்பகுதியில் ஏற்பட்ட மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தியின் மதிப்பு சரிந்தது. குறிப்பாக இயந்திர பொறியியல் தொழில் மற்றும் பிற உற்பத்தித் தொழில்களினதும், நெசவுத் தொழிலினதும் உற்பத்தி குறைந்தது.

கல்வி[தொகு]

சால்பாஸ் என்பது பைஜான் தவாஸ்டியாவில் உள்ள நகராட்சிகளுக்குச் சொந்தமான ஒரு கல்வி கூட்டமைப்பாகும். தொழிற்கல்வி மற்றும் வர்த்தக கல்வியை வழங்குகின்றது. தனியாருக்குச் சொந்தமான திலா மற்றும் லஹ்தி கன்சர்வேட்டரி முறையே சுகாதார மற்றும் இசை தொடர்பான கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கின்றன.

லஹ்தி பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான வடிவமைப்பு மற்றும் நுண்கலை நிறுவனம் லஹ்தியின் மிகப்பெரிய கல்விச் சொத்தாக கருதப்படுகின்றது. இந்த நிறுவனம் குறிப்பாக நகைகள் வடிவமைப்பிற்கும், தொழில்துறை வடிவமைப்பிற்கும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. உலோகம், மரவேலை மற்றும் தளபாடங்கள் ஆகிய துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும்.

விளையாட்டு[தொகு]

ஆண்டுதோறும் நடைபெறும் பனி விளையாட்டுக்களுக்காக இந்த நகரம் நன்கு அறியப்பட்டிருக்கிறது. 1926, 1938, 1958, 1978, 1989, 2001 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் எஃப்ஐஎஸ் நோர்டிக் உலக ஸ்கை சாம்பியன்ஷிப்பை ஏழு முறை நடத்திய ஒரே நகரம் இதுவாகும்.

வரலாற்று ரீதியாக நகரத்தின் மிக வெற்றிகரமான காற்பந்து சங்கம் குசிசி ஆகும். 1980 ஆண்டின் முற்பகுதியிலிருந்து 1990 கள் வரை நீடித்த அவர்களின் பொற்காலங்களில் ஐந்து பின்னிஷ் சாம்பியன்ஷிப்புகளையும், இரண்டு பின்னிஷ் கோப்பை பட்டங்களையும் வென்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்றனர்.

1997 ஆம் ஆண்டின் உலக விளையாட்டு, 2009 ஆம் ஆண்டின் உலக முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லஹ்தியில் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக்கிற்காக கிசாபுஸ்டோவில் சில காற்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.[5]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லஹ்தி&oldid=3570141" இருந்து மீள்விக்கப்பட்டது