லஷ்கர்-ஏ-இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லஷ்கர்-ஏ-இஸ்லாம் (ஆங்கிலம்: Lashkar-e-Islam, உருது: لشكرِ اسلام‎) (LI அல்லது LeI) என்பதற்கு இஸ்லாத்தின் படை எனப் பொருளாகும். இது ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பு ஆகும். இது பாக்கிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளிலும், கைபர் பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இவ்வியக்கத்தை முப்தி முனிர் ஷாகிர் தொடங்கினார். இவ்வியக்கத்தின் தற்போதையத் தலைவர் மங்கள் பாக் ஆவார்.

இந்த இயக்கத்தில் 1,80,000 அதிகமான தன்னார்வலர்கள் இருப்பதாக 2008 ஏப்ரல் 17 அன்று இந்த இயக்கம் அறிவித்தது.[1] இந்த இயக்கம் தனது பெயரை லஷ்கர்-ஏ-இஸ்லாம் என்பதிலிருந்து ஜெய்ஷ்-ஏஇஸ்லாமி என மாற்றிக் கொண்டதாக 2008 ஏப்ரல் 27 ஆம் தியதி அறிவித்தது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்தப்படவில்லை. வேறு குழுக்கள் இப்பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த இயக்கம் பாஹூர் பகுதியில் வாலி ரெஹ்மான் தலைமையில் செயல்படுகிறது.[2]

இயக்கத்தின் தலைமை மாற்றம்[தொகு]

  • 2004 ஆம் ஆண்டு முப்தி முனிர் ஷாகிர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் தலைவராக அப்ரிதி ஷுராவின் உறுப்பினரான ஹாஜி தாஜ் மொகம்மது அறியப்பட்டார். பின்னர் இவர் தகவல் தொடர்பாளர்தான் என உறுதி செய்யப்பட்டது.[3] However, a report from earlier that month refers to Taj as only "a spokesman for the Mufti"[4]
  • தற்போதையத் தலைவர் மங்கள் பாக் ஆவார்.

நடவடிக்கைகள்[தொகு]

  • கைபர் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பியது.[5]
  • பாக்கிஸ்தான் இராணுவ வீரர்களைக் கைபர் பகுதியில் தாக்கியது.[6]
  • கைபர் பகுதி அரசு அலுவலகங்களை மூடக் கட்டாயப்படுத்தியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லஷ்கர்-ஏ-இஸ்லாம்&oldid=3372130" இருந்து மீள்விக்கப்பட்டது