லலிதா சிவகுமார்
| இலலிதா சிவகுமார் Lalitha Sivakumar | |
|---|---|
இலலிதா சிவகுமார் | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | இலலிதா |
| பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
| பிறப்பிடம் | இந்தியா |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை ஆசிரியர், ஆசிரியர், வாய்ப்பாட்டுக் கலைஞர், |
| இசைத்துறையில் | 1966 - முதல் |
இலலிதா சிவகுமார் (Lalitha Sivakumar) என்பவர் முதன்மையான கருநாடக இசை ஆசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். தன்னுடைய மாமியாருடனும், பிரபல கருநாடக இசைப் பாடகி, மறைந்த டி. கே. பட்டம்மாளுடனும், இசை நிகழ்ச்சிகளில் வாய்ப்பாட்டுக் கலைஞராக இருந்தார்.[1] இலலிதா சிவகுமார் இந்திய இசையில் ஒரு முக்கியப் பாடகரான டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் தாயும், குருவும் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[2] இவர் டி. கே. பி கருநாடக இசைப் பள்ளியின் மிகவும் பிரபலமான மூத்த குரு (ஆசிரியர்) ஆவார்.
தொடக்க வாழ்க்கை
[தொகு]இலலிதா சிவகுமாரின் தந்தை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் ஆவார். அவர் கர்நாடக இசைத் துறையில் மூத்தவரும், மிகவும் புகழ்பெற்ற மிருதங்க வித்வானும் ஆவார். மேலும் சங்கீத கலாநிதி, பத்ம பூசண் ஆகிய விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க வித்தானும் ஆவார். இலலிதா சிவகுமார் தன் 18 வயதில் டி. கே. பட்டம்மாளின் மகன் ஐ. சிவகுமாரை மணந்தார். திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்து, டி. கே. பட்டம்மாளிடமிருந்து கர்நாடக இசையில் பயிற்சி பெறத் தொடங்கினார்.[1]
தொழில்
[தொகு]அதன்பிறகு, விரைவில் ஒரு தனிப் பாடகராகவும், டி. கே. பட்டம்மாளுடன் சேர்ந்து பாடுபவராகவும் மிளிர்ந்தார். மேலும் டி. கே. ஜெயராமன், கே. வி. நாராயணசாமி, எம். எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல முன்னணி கருநாடக இசைப் பாடகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும், ஒரு தனிப் பாடகராக இவர் குறைந்த காலமே பாடியுள்ளார். பெரும்பாலும் இவரின் குருவுடன் சேர்ந்தே குரல் கொடுத்துள்ளார்.[1]
இலலிதா சிவகுமார் பல்வேறு இந்திய மொழிகளில் பல கிருதிகள், தில்லான்கள், பஜனைகளுக்கு இசையமைத்துள்ளார்.
பல அமைப்புகள் இலலிதா சிவகுமாரின் திறமையையும், கருநாடக இசை உலகிற்கு அளித்த பங்களிப்புகளையும் அங்கீகரித்துள்ளன. அண்மையில், இந்த இசை மரபுத் தொடர்ச்சியை அங்கீகரித்து, மெட்ராஸ் சவுத் லயன்ஸ் நற்பணி மன்றமும், இரச - ஏ. ஆர். பி. ஐ. டி. ஏ - இந்திய நாடகக் கலைகளின் ஆராய்ச்சி மற்றும் செயல்திறனுக்கான அகாதமியும், 2016 சனவரி 4 அன்று இலலிதாவிற்கும், ஐ. சிவகுமாருக்கும், 'இசை இரச மாமணி' என்ற பட்டத்தை வழங்கியது.
இலலிதா சிவகுமாரின் ஆசிரியர் வாழ்க்கையானது பெரும் வெற்றியாகும். இலலிதா சிவகுமார் தலைமையில் செயல்படுவது டி. கே. பி கருநாடக இசைப் பள்ளியாகும். ஒப்பீட்டளவில், இந்தப் பள்ளியானது உலகம் முழுவதும் இருந்தும் மாணவர்களைப் பரவலாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நடிப்புக் கலைஞர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவரிடமிருந்து இசை கற்ற மாணவர்கள் உலகின் பல பகுதிகளில் நல்ல ஆசிரியர்களாகப் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்தத் துறையில் ஒரு மூத்த ஆசிரியராகக் கருதப்படும் இவர், டி.கே.பி.யின் இசை மரபுகளை உலகளவில் பல மாணவர்கள் வழியாக அனுப்பி வருகிறார். இவரது கற்பிக்கும் முறை தனித்துவமானது என்று கூறப்படுகிறது. பல புகழ்பெற்ற அறிஞர்களால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட கருநாடக இசையின் மரபுகளைக் கடைபிடிப்பதை இவர் வலியுறுத்துகிறார், மொழிக்கு இவர் முக்கியத்துவம் அளிக்கிறார், கலைஞர்களின் உச்சரிப்பு, நிகழ்த்துகைத் திறன்களுக்காக நன்கு அறியப்படுகிறார்.
இவர் மாணவர்களுக்கு நேரடியாகவும், இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மாணவர்களுக்கும் மேம்பட்ட கருநாடக வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்துள்ளார். இலலிதா சிவகுமாரின் சீடர்களாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமல்லாமல், இலலிதா இலாவண்யா சுந்தரராமன் (இவரின் பேத்தி),[1] டாக்டர் நிரஞ்சனா சீனிவாசன்,[3] பல்லவி பிரசன்னா,[4] நளினி கிருஷ்ணன், மகாராஜபுரம் சீனிவாசன், டாக்டர் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.[5]
இவரது இசை அறிவிற்குச் சான்றாக, இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும் பல கருநாடக இசைப் போட்டிகள் மற்றும் பக்தி இசைப் போட்டிகளுக்கு இலலிதா சிவகுமார் நடுவராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "The Hindu : Friday Review Chennai - Columns : Life time bond with music". Archived from the original on 2013-09-14. Retrieved 2020-03-08.
- ↑ The Hindu : Entertainment Bangalore - Music : Proud pedigree is not all பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Hindu : Arts / Music : Confident and comfortable
- ↑ The Hindu : Friday Review Chennai / Music : Judicious selection of songs பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Hindu : Well articulated concert". Archived from the original on 2004-09-08. Retrieved 2020-03-08.