லக்சயா சென்
இலக்சயா சென் | |
---|---|
2018 இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்துடன் | |
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 16 ஆகத்து 2001 அல்மோரா, உத்தராகண்ட், இந்தியா |
உயரம் | 1.79 m (5 அடி 10 அங்) |
கரம் | வலது கை |
பயிற்சியாளர் | விமல் குமார் பிரகாஷ் பதுகோனே தீரேந்திர குமார் சென் |
ஆடவர் ஒற்றையர் பிரிவு | |
பெரும தரவரிசையிடம் | 9 (07 ஜூன் 2022) |
தற்போதைய தரவரிசை | 10 (09 ஆகஸ்ட் 2022) |
இ. உ. கூ. சுயவிவரம் |
பதக்கத் தகவல்கள்
|
---|
இலக்சயா சென் (பி. 16 ஆகத்து 2001) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவன் கோட்டத்திலுள்ள அல்மோராவில் பிறந்தார்[1]. தற்போது உலக இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார்[2]. 2017ல் உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடம் வகித்தார்[3]. 2018ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் தங்கமும்[3] 2021ல் ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் போட்டிகளில் தாமிரப் பதக்கமும் 2022 சனவரியில் புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் திறந்தசுற்றுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்[4].
குடும்பம்
[தொகு]அவரது தந்தை தீரேந்திர குமார் சென் ஒரு இறகுப்பந்தாட்ட பயிற்சியாளர்; அவரது சகோதரர் சிராக் சென்னும் ஒரு இறகுப்பந்தாட்ட வீரராவார்[3].
பயிற்சி
[தொகு]பிரகாஷ் பதுகோனின் இறகுப்பந்தாட்டப் பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் வீரர் விமல் குமாரிடம் இலக்சயா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Who Is Lakshya Sen?". ரிபப்ளிக்வேல்டு. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2022.
- ↑ "Lakshya SEN". bwfbadminton. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2022.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Lakshya Sen Biography". கிரீடன். பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2022.
- ↑ "Lakshya SEN". bwfbadminton. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2022.