லக்சயா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்சயா சென்
2018 இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்துடன்
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு16 ஆகத்து 2001 (2001-08-16) (அகவை 22)
அல்மோரா, உத்தராகண்ட், இந்தியா
உயரம்1.79 m (5 அடி 10 அங்)
கரம்வலது கை
பயிற்சியாளர்விமல் குமார்
பிரகாஷ் பதுகோனே
தீரேந்திர குமார் சென்
ஆடவர் ஒற்றையர் பிரிவு
பெரும தரவரிசையிடம்9 (07 ஜூன் 2022)
தற்போதைய தரவரிசை10 (09 ஆகஸ்ட் 2022)
இ. உ. கூ. சுயவிவரம்
இலக்சயா சென் பதக்கப்பட்டியல்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 ஹூல்வா ஆண்கள் ஒற்றையர்
தாமஸ் & உபேர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பாங்காக் ஆண்கள் குழு
காமன்வெல்த் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் ஆண்கள் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பர்மிங்காம் குழு
ஆசிய குழு வாகையாளர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 மணிலா ஆண்கள் குழு
இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பியூனஸ் அயர்ஸ் ஆண்கள் ஒற்றையர்
பி.டபல்யூவ்.எஃப் உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 மார்க்கம் ஆண்கள் ஒற்றையர்
ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 ஜகார்த்தா ஆண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 பாங்காக் ஆண்கள் ஒற்றையர்

இலக்சயா சென் (பி. 16 ஆகத்து 2001) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவன் கோட்டத்திலுள்ள அல்மோராவில் பிறந்தார்[1]. தற்போது உலக இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார்[2]. 2017ல் உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடம் வகித்தார்[3]. 2018ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் தங்கமும்[3] 2021ல் ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் போட்டிகளில் தாமிரப் பதக்கமும் 2022 சனவரியில் புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் திறந்தசுற்றுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்[4].

குடும்பம்[தொகு]

அவரது தந்தை தீரேந்திர குமார் சென் ஒரு இறகுப்பந்தாட்ட பயிற்சியாளர்; அவரது சகோதரர் சிராக் சென்னும் ஒரு இறகுப்பந்தாட்ட வீரராவார்[3].

பயிற்சி[தொகு]

பிரகாஷ் பதுகோனின் இறகுப்பந்தாட்டப் பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் வீரர் விமல் குமாரிடம் இலக்சயா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who Is Lakshya Sen?". ரிபப்ளிக்வேல்டு. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2022.
  2. "Lakshya SEN". bwfbadminton. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2022.
  3. 3.0 3.1 3.2 3.3 "Lakshya Sen Biography". கிரீடன். பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2022.
  4. "Lakshya SEN". bwfbadminton. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சயா_சென்&oldid=3490978" இலிருந்து மீள்விக்கப்பட்டது