ரோசி தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோசி தாமஸ் (1927-2009) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி இலக்கிய எழுத்தாளராவார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

மலையாள மொழி இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான மனச்சேரி பௌலோஸ் பால் மற்றும் மேரி பால் ஆகியோரின் மகளாக 1927 ஆம் ஆண்டு கேரளாவில் ரோசி தாமஸ் பிறந்துள்ளார். [1] திருச்சூர் மற்றும் [எர்ணாகுளம்|எர்ணாகுளத்தில்]] தனது பள்ளிப்படிப்பை முடித்த ரோசி, ஆலுவாவில் உள்ள யூ சி கல்லூரியில் பட்டமும் பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து தனது தந்தையான எம்.பி.பாலின் தனிப்பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார், மலையாள நாடக ஆசிரியரும் இலக்கிய விமர்சகருமான சி.ஜே.தாமஸ் என்பவரை மணந்த இவர் அவரது முப்பத்தி ஒன்றாவது வயதிலேயே கணவரை இழந்து கைம்பெண்ணானர்.தனது கணவரின் இறப்பிற்கு பிறகு, முறையாக ஆசிரியக்கல்வி பயின்ற இவர், அதன் பின்னே கட்டுரைகளையும், புதினங்களையும் எழுத ஆரம்பித்தார். அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றான இவன் என்டே பிரிய சிஜே என்பது அவரது கணவரைப் பற்றிய நினைவு குறிப்புகளே ஆகும். இவரும் 16 டிசம்பர் 2009 அன்று அவரது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். [2]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

  • இவன் என்டே பிரிய சிஜே( சுயசரிதை )
  • உறங்குன்னா சிம்ஹம் (எம்.பி பால் பற்றிய நினைவு)
  • அன்னி (நாவல்)
  • ஜலகக்காட்சி (கட்டுரைகள்)
  • மலவெல்லம்
  • அமெரிக்காவில் ஒரு மலையாளப்பெண் ( பயணக்கட்டுரை )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (2009-12-17). "റോസി തോമസ് അന്തരിച്ചു". malayalam.oneindia.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  2. http://www.mathrubhumi.com/story.php?id=72036[தொடர்பிழந்த இணைப்பு] (In Malayalam)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசி_தாமஸ்&oldid=3935111" இலிருந்து மீள்விக்கப்பட்டது