எம். பி. பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். பி. பால்
200px
தொழில் எழுத்தாளர், கல்வியாளர், இலக்கிய விமர்சகர்
நாடு  இந்தியா
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
 • நாவல் சாகித்யம்
 • செருகதா பிரதிஸ்டானம்
 • சௌந்தயதின்டே அதிஷ்டானம்
 • சித்ரகலையும் காவியக்கலையும்
 • சாகித்ய விஷாரம்
துணைவர்(கள்) மேரி பால்
பிள்ளைகள்
 • ரோஸி தாமஸ் (மகள்)
 • சி. ஜே. தாமஸ் (மருமகன்)
பெற்றோர்
 • பௌலோஸ் (தந்தை)
 • ரோசம்மா (மகள்)

மனச்சேரி பௌலோஸ் பால் ( Menacherry Poulose Paul ) (1904-1952) எழுத்தாளரும், கல்வியாளரும், அறிஞரும், மலையாள இலக்கிய விமர்சகரும் ஆவார். மலையாள இலக்கியத்தின் முக்கிய இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகக் கருதப்படும் பால் தனது படைப்புகளான நாவல் சாகித்தியம், செருகத பிரஸ்தானம் ஆகியவற்றின் மூலம் மலையாளத்தில் ஒப்பீட்டு இலக்கியங்களைத் தொடங்கினார். புரோகமன சாகித்ய பிரஸ்தானத்தின் பின்னால் உள்ள முக்கிய சக்திகளில் ஒருவராகவும், கேரளாவில் இணைக் கல்லூரி கல்வி முறையின் நிறுவனராகவும், எழுத்தாளர்களின் கூட்டுறவு இயக்கமான "சாகித்ய பிரவர்தக சஹகரண சங்க"த்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.

வாழ்க்கை[தொகு]

எஸ். பி. கல்லூரி - இங்கு பால் இரண்டு வெவ்வேறு காலங்களில் ஆசிரியராக இருந்தார்

பால் 1904 மே தினத்தில் இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் வரப்புழாவில் பவுலோஸ் மற்றும் ரோசம்மா ஆகியோருக்குப் பிறந்தார். [1] உள்ளூரில் ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு, இவர் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை எர்ணாகுளம் புனித ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் உயர்நிலைப் பள்ளி படிப்பை உதவித்தொகையுடன் முடித்திருந்தாலும், 1918 ஆம் ஆண்டில் இவருக்கு தேர்வுக்குரிய வயது குறைவாக இருந்ததால் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வை எழுதமுடியவில்லை. [2] பின்னர், அடுத்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று 1924 இல் திருச்சிராப்பள்ளியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெறுவதற்கு முன்பு திருச்சூர் புனித தோமையார் கல்லூரியில் தனது இடைநிலை படிப்பை முடித்தார். பட்டப்படிப்பைத் தொடர்ந்து அதே கல்லூரியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்த காலத்தில், இவர் இந்தியக் குடிமைப் பணி தேர்வெழுதி தோல்வியுற்றார். 1928இல் கேரளா திரும்பிய இவர் திருச்சூர் புனித தோமையார் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து, 1931 வரை அங்கேயே பணி புரிந்தார். இதற்கிடையில், இவர் 1929இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1931ஆம் ஆண்டில், கல்லூரியின் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது இறுதியில் நீதிமன்ற வழக்காக மாறியது.

வேலையை இழந்ததும், பால் புனித தோமையார் கல்லூரிக்கு எதிரே ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, கேரளாவின் முதல் இணைக் கல்லூரியான எம். பி. பால்ஸ் டுடோரியல் கல்லூரியைத் தொடங்கினார். [3] பின்னர், இவர் எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் இணைக் கல்லூரிகளைத் தொடங்கினார். மேலும், 1933ஆம் ஆண்டில் ஆரம்பத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் இவர் கைவிட்ட சட்டத்தைப் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். [2] அடுத்த ஆண்டு, இவர் சங்கனாச்சேரியிலுள்ள புனித பெர்க்மான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக 1936ஆம் ஆண்டில் வேலையை விட்டு வெளியேறினார். திரிச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் , திருவனந்தபுரம் போன்ற இடங்களில் தான் நிர்வகித்த இணைக் கல்லூரிகளுக்குச் சென்றார். [1] புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முத்தாத்து வர்கி இந்த கல்லூரிகளில் ஒன்றில் ஆசிரியராக இருந்தார். [4] 1944–46 காலப்பகுதியில் மீண்டும் புனித பெர்க்மான்ஸ் கல்லூரியில் இரண்டாவது முறையாகப் பணியாற்றினார். ஆனால் 1950 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்திற்குச் சென்று மார் இவானியோஸ் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். 1952ஆம் ஆண்டில், கோட்டயத்தில் உள்ள தனது இணைக் கல்லூரியை புதுப்பிக்க ஒரு முயற்சியை மேற்கொண்டார். [2]

குடும்பம்[தொகு]

பால் 1926 இல் மேரி என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு ரோஸி தாமஸ் என்ற மகள் ஒரு இருந்தார். பின்னர், இவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக மாறினார். நாடக ஆசிரியரும் விமர்சகருமான சி. ஜே.தாமஸ் இவரது மருமகன் ஆவார். [5]

இறப்பு[தொகு]

பால், 1952 சூலை 12 ஆம் தேதி, தனது 48 வயதில், திருவனந்தபுரத்தில் இறந்தார். அவர்களுடன் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டதால் அவரை ஒரு கத்தோலிக்க தேவாலயக் கல்லறையில் அடக்கம் செய்ய மறுத்துவிட்டத. பின்னர், இவரது மரண எச்சங்கள் திருவனந்தபுரத்தின் பட்டூரில் உள்ள ஒரு பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன . [6]

மரபும் கௌரவங்ளும்[தொகு]

இலக்கிய விமர்சன நடைமுறைக்கு அடிப்படையாக அழகியலைப் படிக்க முயன்ற பால் [7] அழகியல், புதினம், சிறுகதை மற்றும் கட்டுரைகளின் இலக்கிய வகைகளை வரையறுக்க மலையாள இலக்கிய விமர்சனத்திற்கு நவீன அணுகுமுறையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவார். [8] மலையாள இலக்கியங்களில் மறுமலர்ச்சி இயக்கத்தை அதன் நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் ஜனநாயகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [9] இலக்கிய ஆர்வலர்கள் குழுவுடன் சேர்ந்து, முகம்மது பஷீர் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட போதிய ஊதியம் பெற போராடிய ஒரு காலத்தில், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட உதவுவதற்கும், அவர்களுக்கு ஒரு நல்ல ஊதியம் பெறுவதற்கும் ஒரு கூட்டுறவு சங்கமான சாகித்ய பிரவர்தக சஹகாரண சங்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்தார். [10] இவர் நாடகத்திலும் தீவிரமாக இருந்தார். மேலும் 1937இல் ஷேக்ஸ்பியர் தியேட்டர் என்ற நாடக நிறுவனத்தையும் நிறுவினார். [11]

பால் மேற்கத்திய இலக்கியங்களை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தினார். மலையாள இலக்கியத்தில் ஒப்பீட்டு இலக்கியங்களைத் தொடங்கிய முதல் விமர்சகரும் ஆவார். இவர் தனது படைப்பான நாவல் சாகித்யத்தில் சேக்சுபியரின் சிம்பலைன், அப்பு நெடுங்காடியின் குண்டலதா, சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா, வால்ட்டர் ஸ்காட்டின் இவான்ஹோ ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தினார். [2] இவரது மற்றொரு படைப்பான செருகத பிரஸ்தனம், இந்த வகை அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது மலையாள சிறுகதையின் பண்புகளை ஆவணப்படுத்தியது. காவ்யா தர்ஷனம், கண்டகத பிரஸ்தனம், காட்யா கதி, சாகித்ய விசாரம், சௌந்தர்யா நிரீக்ஷனம் ஆகியவை இலக்கிய விமர்சனம் குறித்த இவரது மற்ற புத்தகங்கள் ஆகும். இவர் மொலியரின் தி மிசர் என்ற நாடகத்தை மலையாளத்தில் லுப்தான் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். [12] ஜார்ஜ் ஒனக்கூர் எழுதிய எம்.பி. பால்-கலாபதின்டே திருசேசிப்புகள் என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இவரது படைப்புகள் விரிவாக உள்ளன. பாலின் மகள் ரோஸி தாமஸ், உரங்குன்னா சிம்ஹம் (உறங்கும் சிங்கம்) என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். இது அவரது தந்தையின் நினைவுகளின் தொகுப்பாகும். [13]

மலையாள மொழி ஆய்வுகள் மற்றும் வரலாற்றில் இலக்கிய சிறப்பை கௌரவிப்பதற்கான வருடாந்திர இலக்கிய விருதான எம்.பி. பால் விருதை எம்.பி. பால் அறக்கட்டளை நிறுவியுள்ளது.[8] இந்த விருதில் 25,000 பரிசும் ஒரு சான்றும் ஒரு தகடும் அடங்கும். [14]

நூலியல்[தொகு]

கட்டுரைகள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இவரைப் பற்றிய படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Writers in Malayalam". Writersinmalayalam.blogspot.ae.
 2. 2.0 2.1 2.2 2.3 "Biography on Kerala Sahitya Akademi portal" (2019-02-25).
 3. Vishumenon, ~ (2011-06-28). "Asianet, Babu Paul and the Church" (en).
 4. Babu, Sathish (2012-05-22). "Imprints On Indian Film Screen: MUTTATHU VARKEY". Imprintsonindianfilmscreen.blogspot.ae.
 5. "Malayalam Writer Rosy Thomas Passes Away" (2014-05-02).
 6. "Call to protect M.P. Paul's vault".
 7. "official website of INFORMATION AND PUBLIC RELATION DEPARTMENT". Prd.kerala.gov.in. மூல முகவரியிலிருந்து 4 June 2016 அன்று பரணிடப்பட்டது.
 8. 8.0 8.1 "Remembering a visionary - Times of India". Timesofindia.indiatimes.com (2012-07-13).
 9. "Kerala / Thiruvananthapuram News : M.P. Paul remembered". The Hindu (2004-05-02).
 10. "M. P. Paul - Veethi profile" (2019-02-25).
 11. "Doyens". Sbcollege.org.
 12. "MP Paul Books" (2019-02-25).
 13. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2 May 2014 அன்று பரணிடப்பட்டது.
 14. "Dr V Rajakrishnan selected for M P Paul literature award" (2013-12-25).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._பால்&oldid=3126070" இருந்து மீள்விக்கப்பட்டது