உள்ளடக்கத்துக்குச் செல்

ரோசாசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசாசைட்டு
Rosasite
நீல மிருதுவான திறள்
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Cu,Zn)2(CO3)(OH)2
இனங்காணல்
நிறம்நீலம், நீலப்பச்சை, பச்சை
படிக இயல்புகதிரியக்க இழை கொத்துகள் போன்ற ஊசி வடிவப் படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்On {100}
பிளப்புசரிபிளவு {100} மற்றும் {010}
முறிவுபிளவு, இழைவடிவம்
விகுவுத் தன்மைஉடையும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுபட்டுப்போன்றது, கண்ணாடி பளபளப்பு முதல் மங்கல் வரை
கீற்றுவண்ணம்இள நீலம் அல்லது பச்சை
ஒப்படர்த்தி4-4.2
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.672 - 1.688 nβ = 1.796 - 1.830 nγ = 1.811 - 1.831
இரட்டை ஒளிவிலகல்δ = 0.139 - 0.143
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது: X = வெளிர் மாணிக்கப் பச்சை அல்லது நிறமற்று; Y = அடர் மாணிக்கப் பச்சை அல்லது வெளிர் நீலம்; Z = அடர் மாணிக்கப் பச்சை அல்லது வெளிர் நீலம்
2V கோணம்அளக்கப்பட்டது: 33°
கரைதிறன்நுரைக்கும், குளிர்ந்த நீர்த்த ஐதரோகுளோரிக் காடி
மேற்கோள்கள்[1][2][3]
Major varieties
Nickeloan rosasiteDark green

ரோசாசைட்டு (Rosasite) (Cu,Zn)2(CO3)(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கார்பனேட்டு வகை கனிமமாகும். துத்தநாகம் மற்றும் தாமிர தாதுவாகப் பயன்படுத்தக்கூடிய சிறிய அளவு திறன் கொண்டது. வேதியியல் ரீதியாக சொல்வதென்றால் இதை ஒரு செப்பு துத்தநாக கார்பனேட்டு ஐதராக்சைடு எனலாம். இக்கனிமத்தில் உள்ள செப்பு மற்றும் துத்தநாக விகிதம் 3:2 ஆகும். செப்பு-துத்தநாக படிவுகளில் இரண்டாம் நிலை ஆக்சிசனேற்ற மண்டலத்தில் ரோசாசைட்டு தோன்றுகிறது. முதலில் 1908 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் சார்டினியாவில் உள்ள ரோசாசு சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரே கனிமத்திற்கும் சூட்டப்பட்டது. இழைவடிவ நீல-பச்சை ரோசாசைட்டு படிகங்கள் பொதுவாக உருண்டையான திரட்டுகளில் காணப்படுகின்றன, பெரும்பாலும் இரும்புத் தாதுவான சிவப்பு லிமோனைட்டு மற்றும் பிற வண்ணமயமான தாதுக்களுடன் தொடர்பு கொண்டதாகவும் ரோசாசைட்டு உள்ளது. ஆரிகால்சைட்டு கனிமத்தைப் போலவே இருக்கும் என்றாலும் ரோசாசைட்டை அதன் உயர்ந்த கடினத்தன்மையால் வேறுபடுத்தி அறியலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாசைட்டு&oldid=3745014" இலிருந்து மீள்விக்கப்பட்டது