உள்ளடக்கத்துக்குச் செல்

ரோகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகேஷ்
பிறப்புரோகேஷ்
சென்னை ,தமிழ்நாடு, இந்தியா
தொழில்பாடலாசிரியர்

ரோகேஷ், ஒரு தமிழ்ப் பாடலாசிரியர். இவர் சென்னைத் தமிழில் எழுதுவதில் வல்லவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

ரோகேஷ், பள்ளிக்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியவராய் இருந்தாலும், பாடலாசிரியராக உயர்ந்துள்ளார். இருபத்தி வயதான இவர், சென்னை பாரீஸில் எந்திர இயற்றுநர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தவுடன் இந்த வேலையை விட்டுவிட்டார். இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆவார்.

முதல் வாய்ப்பு

[தொகு]

கிரண் (அனேகன் படத்தின் கலை இயக்குநர்) மற்றும் ரோகேஷின் நண்பர் முத்து மூலமாக ரோகேஷ் இயக்குநர் கே. வி. ஆனந்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதன் மூலம், அனேகன் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.

எழுதிய பாடல்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல்
2015 அனேகன் டங்கா மாறி ஊதாரி
மாரி பகுலு ஒடையும்
ரோமியோ ஜூலியட் டண்டணக்கா
திரிஷா இல்லனா நயன்தாரா பிட்டு படம் டி
வேதாளம் ஆலுமா டோலுமா

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகேஷ்&oldid=3785072" இலிருந்து மீள்விக்கப்பட்டது