ரொட்ரிகோ துதெர்த்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:39, 26 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
ரொட்ரிகோ துதெர்த்தெ
Rodrigo Duterte
டவாவோ நகரத் தந்தை
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 30, 2013
முன்னையவர்சாரா துதெர்த்தெ
பதவியில்
சூன் 30, 2001 – சூன் 30, 2010
முன்னையவர்பெஞ்சமின் சி. டெ குசுமான்
பின்னவர்சாரா துதெர்த்தெ
பதவியில்
பெப்ரவரி 2, 1988 – மார்ச் 19, 1998
முன்னையவர்சாக்கின்டோ டி. ருபில்லார்
பின்னவர்பெஞ்சமின் சி. டெ குசுமான்
டவாவோ நகரத் துணை மேயர்
பதவியில்
சூன் 30, 2010 – சூன் 30, 2013
முன்னையவர்சாரா துதெர்த்தெ
பின்னவர்பவலோ துதெர்த்தெ
பதவியில்
மே 2, 1986 – நவம்பர் 27, 1987
பொறுப்பில்
முன்னையவர்கார்னெலியோ பி. மாசுகரினோ
பின்னவர்கில்பெர்ட் ஜி. அபெல்லாரா
டவாவோ நகர நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1998 – சூன் 30, 2001
முன்னையவர்பிராசுப்ரோ நோகிரேலெசு
பின்னவர்பிராசுப்ரோ நோகிரேலெசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரொட்ரிகோ ரோவா துதெர்த்தெ

மார்ச்சு 28, 1945 (1945-03-28) (அகவை 79)
மாசின், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிபிடிபி–லபான் (தேசிய)
அக்பாங் ச டவோங் லுங்சோட் (உள்ளூர்)
துணைவர்எலிசபெத் சிம்மர்மேன் (1973–1998)
துணைசியெலடோ "ஹனிலெட்" அவான்செனா[1]
பிள்ளைகள்பவலோ
சாரா
செபாஸ்டியன்
வெரொனிகா
முன்னாள் கல்லூரிபிலிப்பீன்சு பல்கலைக்கழக லைசியம்
சான் பெடா சட்டக் கல்லூரி
இணையத்தளம்பரப்புரை வலைத்தளம்

ரொட்ரிகோ ரோடி ரோவா துதெர்த்தெ (Rodrigo "Rody" Roa Duterte[2], பிறப்பு மார்ச் 28, 1945), விளிப்பெயர் டிகொங், பிலிப்பீனிய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். பிலிப்பீன்சில் மிக நீண்ட காலம் மேயராகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். மிண்டனாவோ தீவில் 1,449,296 மக்கள் வாழும் டவாவோ நகரத்தின் மேயராக ஏழு முறை, 22 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார். முன்னதாக துணை மேயராகவும் நாடாளுமன்றத்தில் டவாவோ நகரத்தின் சார்பான உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். டைம் இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.[3][4][5]

பிலிப்பீன்சு குடியரசுத் தலைவராகப் போட்டியிட பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும்[6] 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் துதெர்த்தெ செவிமடுக்கவில்லை.[7] இருப்பினும், நவம்பர் 21, 2015இல் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மே 2016 தேர்தல் முடிவுகளில் முன்னணியில் உள்ளார்.[8]

மேற்சான்றுகள்

  1. Duterte’s common-law wife joins him in Manila events – Rappler.
  2. Personal Data from i-site.ph. URL last accessed 2006-10-14.
  3. "The Punisher". TIME.com. 19 July 2002. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  4. "The Punisher: 'I am 100 per cent terrorist'". NewsComAu. 30 June 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  5. "The Punisher - Eye For an Eye". பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  6. [1]
  7. [2]
  8. Oliver Holmes. "Philippines election: 'Punisher' Rodrigo Duterte in lead as polls close". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்ரிகோ_துதெர்த்தே&oldid=2218255" இலிருந்து மீள்விக்கப்பட்டது