சட்டத்துக்குப் புறம்பான கொலைகள்
Jump to navigation
Jump to search
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என்பது அரசியல், தொழிற்சங்க, சமயத் தலைவர்களை, அல்லது எதிர்ப்புப் போராட்டக்காரர்களை, சமூக செயற்பாட்டாளர்களை அரசு அல்லது அரச அலுவலகர்கள் (காவல், படைத்துறை) போன்றோர் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொலை செய்வதைக் குறிக்கும். இலங்கை, இந்தியா, பாகிசுத்தான், வங்களாதேசம், யமேக்கா, அப்கானிசுத்தான், உருசியா போன்ற நாடுகளில் இவை நடந்துள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
நாடுகள் வாரியாக[தொகு]
இலங்கை[தொகு]
இலங்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் வழமையாக நடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியா[தொகு]
இந்தியாவில் என்கவுண்டர் என்ற போர்வையில் காவல்துறையால் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.