டைம் (இதழ்)
மேலாண் தொகுப்பாசிரியர் | ரிச்சர்டு இசுடெங்கெல் |
---|---|
வகை | செய்தி இதழ் |
இடைவெளி | வாராந்தரி |
Total circulation (2011) | 3,376,226[1] |
முதல் வெளியீடு | மார்ச்சு 3, 1923 |
நிறுவனம் | டைம் நிறுவனம் (டைம் வார்னர்) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அமைவிடம் | நியூயார்க் நகரம் |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www |
ISSN | 0040-781X |
டைம் (வணிகக்குறி: TIME) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வாரம் ஒருமுறை வெளியாகும் ஓர் செய்தி இதழ் ஆகும். த இன்டர்நேசனல் மாகசைன் ஆப் இவென்ட்சு என்பதன் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துச் சுருக்கமே டைம் என்பதாகும். ஐரோப்பியப் பதிப்பு (டைம் ஐரோப்பா, முன்பு டைம் அட்லாண்டிக்) இலண்டனிலிருந்து வெளியாகிறது. இந்தப் பதிப்பு மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் 2003ஆம் ஆண்டிலிருந்து இலத்தீன் அமெரிக்கா செய்திகளையும் உள்ளடக்கியது. ஆசியப் பதிப்பு (டைம் ஆசியா) ஹாங்காங்கிலிருந்து வெளியாகிறது. சிட்னியிலிருந்து வெளியாகும் தென் பசிபிக் பதிப்பு, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள் குறித்த செய்திகளை கொண்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியிட்டு வந்த விளம்பரதாரர் பதிப்பை திசம்பர் 2008 முதல் டைம் நிறுத்திக் கொண்டது.[2]
டைம் உலகின் மிகவும் படிக்கப்படும் வாரமொருமுறை செய்தி இதழாக 25 மில்லியன் வாசகர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 20 மில்லியன் வாசகர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளனர். இதன் மேலாண் தொகுப்பாசிரியராக ரிச்சர்டு இசுடெங்கெல் 2006ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paid & Verified Magazine Publisher's Statement (January–June 2011)" (PDF). timemediakit.com. Audit Bureau of Circulations. July 25, 2011. Archived from the original (PDF) on ஜனவரி 11, 2012. பார்க்கப்பட்ட நாள் September 6, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Time Canada to close". mastheadonline.com. December 10, 2008. பார்க்கப்பட்ட நாள் September 6, 2011.
மேலும் அறிய
[தொகு]- Chambers, Whittaker (1952). Witness. New York: Random House. LCCN 52005149.
- Lundberg, Ferdinand. America's Sixty Families. New York: Vanuguard Press, 1937
- Swanberg, W. A. Luce and his Empire. New York: Scribner, 1972
- Wilner, Isaiah. The Man Time Forgot: A Tale of Genius, Betrayal, and the Creation of Time Magazine, HarperCollins, New York, 2006
வெளி இணைப்புகள்
[தொகு]- காலத் திருப்பத்தில் டைம்!
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Mobile)
- டுவிட்டரில் டைம்
- Time Archive பரணிடப்பட்டது 2013-08-27 at the வந்தவழி இயந்திரம் – archive of magazines and covers from 1923 through present
- Time Magazine Covers Timeline பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம்
- Table of Contents of the premiere issue பரணிடப்பட்டது 2012-04-30 at the வந்தவழி இயந்திரம் vol. 1, issue 1, March 3, 1923
- Time articles பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம் by Whittaker Chambers