ரேகா ஆர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா ஆர்யா
Rekha Arya
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், உத்தராகண்டு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
18 மார்ச்சு 2017
உத்தராகண்ட சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சூலை 2014
முன்னையவர்அச்சய் தம்தா
தொகுதிசோமேசுவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 திசம்பர் 1978 (1978-12-15) (அகவை 45)
அல்மோரா, உத்தராகண்டம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்கிரிதர்லால் சாகு

ரேகா ஆர்யா (Rekha Arya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரகண்ட மாநிலத்தில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார். உத்தரகண்டம் மாநில அரசாங்கத்தில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார்.[1] 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட சோமேசுவர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கிரிதர்லால் சாகு என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rekha Arya pedals to raise awareness on skewed sex ration in state". Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
  2. https://www.oneindia.com/someshwar-assembly-elections-uk-51/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_ஆர்யா&oldid=3840348" இலிருந்து மீள்விக்கப்பட்டது