ரூபா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூபா ராவ்
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா
கல்விஏசியன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனம்
பணிதிரைப்பட படைப்பாளி
அறியப்படுவதுதி அதர் லவ் ஸ்டோரி
கண்டுமூடே

ரூபா ராவ் (Roopa Rao, பிறப்பு மே 18) என்பவர் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சுதந்திர இந்திய திரைப்படப் படைப்பாளி ஆவார். இவர் இந்தியாவின் முதல் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான காதல் கதை வலை தொடரான, தி அதர் லவ் ஸ்டோரியின் (2016) எழுத்தாளரும், இயக்குநரும் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட விருது பெற்ற கன்னட திரைப்படமான கண்டுமூடே (2019) படத்தை இயக்கியதற்காக குறிப்பாக ரூபா ராவ் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரூபா ராவ் பணியாளர் மேலாண்மையுடன் வணிகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். நிதித்துறையில் பயின்றுவந்த முதுநிலை படிப்பை பாதியில் நிறுத்தினார். ஆறு ஆண்டுகள், இன்போசிஸ் சிறுவனத்தில் பணிபுரிந்தார். திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற தன் நீண்டகால விருப்பத்தால், திரைப்படப் படைப்பில் ஈடுபட தனது வேலையை விட்டுவிட்டார். பின்னர் தில்லியில் உள்ள ஏசியன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனத்தில் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பில் படிப்பை முடித்தார். இதற்குப் பிறகு, இவர் ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளருக்கு உதவியாளராக இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார்.[1]

தொழில்[தொகு]

பின்னர் இந்தியா திரும்பிய இவர். இந்தியாவில் இவர் தனது கலைத் திறமையை மேம்படுத்துவதற்காக ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை உருவாக்கினார். கன்னடத் திரைப்படமான விஷ்ணுவர்தனா மற்றும் சுயாதீன தமிழ் திரைப்படமான குறை ஒன்றும் இல்லை ஆகியவற்றை இணைந்து இயக்கினார். பிறகு, இவர் தனது முதல் பெரிய அளவிலான படமான தி அதர் லவ் ஸ்டோரியில் பணியாற்றத் தொடங்கினார்.

தனது இளம் வயதிலிருந்தே ஒரு எழுத்தாளராக இருந்த இவர். தனது கல்லூரி காலத்தில் காதலிக்கும் இரண்டு இளம் பெண்களின் கதையை எழுதியிருந்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறான கதையாக இருந்த காரணத்தினால் அதை முன்னெடுக்கவில்லை.[2]

பின்னர், 2015 இல், இவர் அக்கதையைக் கொண்டு தானே பணியாற்ற முடிவு செய்தார். கதையின் மையக் கருப்பொருளானது இந்தியாவில் பழமைவாதிகளால் எதிர்க்கப்படும் தலைப்பு என்பதால், இவர் தனது படத்திற்கான தயாரிப்பாளர்களைக் கண்டடைவதில் சிரமங்களை எதிர்கொண்டார். இதனைத் தொடர்ந்து விஷ்பெர்ரி நிதி தளம் வழியாக ரூ நன்கு இலட்சத்தைத் திரட்டினார்.

தி அதர் லவ் ஸ்டோரி, வலை தொடர் இரண்டு இளம் பெண்களுக்கு இடையிலான காதல் கதையாகும். இது 27 ஆகத்து 2016 அன்று ஒளிபரப்பப்பட்டது. இதன் முதல் பருவமானது 12 அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. பெங்களூரில் 1990 களின் பிற்பகுதியில்/2000 களின் முற்பகுதியில் கதை நடப்பதாக உருவாக்கபட்டது. இந்த வலை தொடரில் ஸ்பூர்த்தி குமஸ்தே, ஸ்வேதா குப்தா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். இது காதலிக்கும் இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை ஆராய்ந்தது.

ரூபா ராவ் என். ஒய். சி வெப் ஃபெஸ்ட் 2016 இல் "சிறந்த இயக்குநர்" விருதையும், டு வெப் ஃபெஸ்ட் 2017 இல் "சிறந்த கதை" விருதையும் பெற்றார். தி அதர் லவ் ஸ்டோரி வலை தொடரானது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மொத்தம் 3 விருதுகளையும், 7 பரிந்துரைகளையும் பெற்றது.

தி அதர் லவ் ஸ்டோரிக்குப் பிறகு, 2017 இல் ராவ் பி.எப்.எப் (பெர்த் பிரெண்ட் பாரெவர்) என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். இதில் 7 வயது குழந்தை, வகுப்பில் மரங்களைப் பற்றி அறிந்து, மரங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. இந்த படம் தொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (டிஐஎஃப்எஃப்) அதிகாரப்பூர்வ தேர்வாக இருந்தது. மேலும் அயர்லாந்து தேசிய திரைப்பட அமைப்பில் குழந்தைகள் படப் பிரிவில் திரையிடப்பட்டது.

2018 இல், அஸ்து ஸ்டுடியோஸ் சூர்யா வசிஷ்டா எழுதி இயக்கி ரூபா ராவ் நடித்த லவ் லெஹ்ட்டர் என்ற பயணக் குறும்படத்தை வெளியிட்டது.[3] ரூபா ராவ் 2018 ஆம் ஆண்டில் தன் நண்பருடன் இணைந்து அமேயுக்தி ஸ்டுடியோஸ் என்ற சுயாதீன தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

2019 இல், ரூபா ராவின் முதல் திரைப்படமான, கண்டுமூடே நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) உலகப் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அங்கு இது "சிறந்த திரைக்கதை" என்ற விருதைப் பெற்றது.

தற்போது, இவர் தனது அடுத்த படத்திற்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு உண்மையாக நடந்த நிகழ்வின் பாதிப்பில் இருந்து இந்தத் திரைப்படத்தை எழுதுகிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Redefining love". theweek.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
  2. "Bengaluru-made lesbian web series gets highest nominations at NYC Web Fest". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
  3. "Love Leh'tter". Astu Studios.
  4. "The Silver Screen Always Seemed More Real To Me: Roopa Rao". She the People. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_ராவ்&oldid=3906266" இலிருந்து மீள்விக்கப்பட்டது