ரிது சிங் (செயல்பாட்டாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிது சிங் (Ritu Singh) (பி. சுமார் 1996) ஒரு இந்திய தலித் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரி தொடர்புடையவர். நியாயமற்ற பணிநீக்கத்திற்கு எதிரான இவரது எதிர்ப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் குறிப்பிடத்தக்க உளவியல் அறிஞர் ஆவார்.[1]

தொடக்க கால வாழ்க்கை.[தொகு]

இவர் பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.

செயல்பாடு[தொகு]

சாதி துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எதிராக 2023 செப்டம்பரில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள கலைப் பீடத்தின் முன் அவர் ஒரு போராட்டத்தை நடத்தினார். 2019 ஆம் ஆண்டில் தௌலத்ராம் கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராக சேர்ந்த பிறகு, டாக்டர் சிங் ஒரு வருடத்திற்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டார், மேலும் இவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இவரது போராட்டம் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இருந்தது. இந்திய கல்வித்துறை அமைச்சகத்தின் (மேனாள் மனித வள மேம்பாட்டுத் துறை) வழிகாட்டுதல்களை கல்லூரி நிர்வாகி மீறியதாக இவர் குற்றம் சாட்டினார்.[2]

192 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் முன் பி.எச்.டி பக்கோடா கடை ஒன்றைத் திறந்தார். இது தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 283) கீழ் டாக்டர் ரிது சிங் மீது தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.[3]

மாணவர்கள் மற்றும் குடிமைச் சங்கங்கள் இவருக்கு ஆதரவாகப் போராட முன்வந்துள்ளன. தலித் அரசியல் கட்சியான பீம் ராணுவ ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தில் இவருடன் இணைந்திருந்தனர். இவரது கோரிக்கைக்கு வலிமை சேர்ப்பதன் மூலம் இவர்கள் நீதியைக் கோரியுள்ளனர்-'நௌக்ரி நஹி நியாய் சாஹியே', (நான் எனது வேலைக்காக போராடவில்லை, நீதியைக் கோருகிறேன்).[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ex DU Teacher Faces Police Case for Setting up a Pakoda Stall to Protest Termination, Caste Discrimination". The Wire. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  2. EJ, Ashfaque (7 March 2024). "I don't want to die, so I decided to fight: Dr Ritu Singh". Maktoob media (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  3. "Former Delhi University ad-hoc professor booked for opening 'pakoda' stall outside varsity". The Indian Express (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  4. Murari, Krishan (2 February 2024). "A professor is fighting DU casteism. She runs a street classroom clutching the Constitution". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.