ராமகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமகிரி
Ramagiri

రామగిరి
கிராமம் மற்றும் மண்டலம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்ராமகிரி, அனந்தபூர்
ஏற்றம்576 m (1,890 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்31,474
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

ராமகிரி (Ramagiri) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலமாகும்.

ஒரு காலத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகளவு தங்கம் கிடைப்பதில் இரண்டாவது இடம்பெற்றிருந்த ராமகிரி தற்பொழுது காற்றாலை மின்னுற்பத்தியாலும் அறியப்படுகிறது.

புவியியல் அமைப்பு[தொகு]

14.3000° வடக்கு 77.5000° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ராம்கிரி கிராமம் பரவியுள்ளது.[1] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 516 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி:[2] ராமகிரி மண்டலத்தில் 6470 குடும்பங்களைச் சேர்ந்த 31,474 பேர் வாழ்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 16,269 பேர் ஆண்கள் மற்றும் 15,205 பேர் பெண்கள் ஆவர். 4,199 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 2,173 பேர் சிறுவர்கள் மற்றும் 2,026 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 15,226 பேராகவும் இருந்தது.

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ராமகிரி கிராமத்தின் மக்கள் தொகை 3,778 ஆக இருந்தது. இம்மொத்த மக்கள் தொகையில் 1,933 பேர் ஆண்கள் மற்றும் 1,845 பேர் பெண்கள் ஆவர். 369 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 189 பேர் சிறுவர்கள் மற்றும் 180 பேர் சிறுமிகள் ஆவர்.

கிராமப்பஞ்சாயத்துகள்[தொகு]

ராமகிரி மண்டலத்தில் பின்வரும் கிராமப் பஞ்சாயத்துகள் இடம்பெற்றுள்ளன.

  1. போலிபள்ளி
  2. குண்டிமாடி
  3. காந்தெமாரி
  4. ராமகிரி
  5. நாசனகோட்டா
  6. எம்.சி.பள்ளி
  7. கொண்டாபுரம்
  8. பேரூரு
  9. தப்பார்லபள்ளி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமகிரி&oldid=2049149" இலிருந்து மீள்விக்கப்பட்டது