ராதிகா அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதிகா கய் அகர்வால், இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட, இணையதள பெண் தொழில்முனைவோரும், நூறு கோடி ருபாய் மதிப்பிலான நிறுவனங்களின் சங்கத்தில் [1] நுழைந்த இந்தியாவின் முதல் பெண்ணுமாவார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இணையவெளி வணிக சந்தை நிறுவனமான ஷாப்கிளூஸ் இன் இணை நிறுவனரான[2] இவர், தற்போது அந்நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராணுவ குடும்ப பின்னணியைக் கொண்ட ராதிகாவின் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவரது தாயார் உணவியல் நிபுணராவார். 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை சொந்தமாக, சுகாதார சங்க நிறுவனத்தை தொடங்கிய போது, ராதிகாவின் தொழில்முனைவு முயற்சியும் தொடங்கியுள்ளது, 1997 ஆம் ஆண்டில், சண்டிகரில் முதன்முதலாக தனது சொந்த விளம்பர நிறுவனத்தை நிறுவியுள்ளார்.[4]

கல்வி[தொகு]

செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்[5] முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ள ராதிகா, விளம்பரம் மற்றும் பொது உறவுகளில்[6] முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகிகளுக்கான பாடத்தையும் முடித்துள்ளார்.

தொழில்[தொகு]

ராதிகா, சியாட்டிலில் உள்ள நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவிலும், கோல்ட்மேன் சாச்ஸில் நிறுவனத்தில் மூலோபாய திட்டமிடல் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மின் வணிகம், வாழ்க்கை முறை, ஆடை வடிவமைப்பு மற்றும் சில்லறை விற்பனை போன்ற பல்வேறு துறைகளில் அமெரிக்காவில் சுமார்  பதினான்கு ஆண்டுகள் வணிக அனுபவம் பெற்றுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

 • அவுட்லுக் வணிக விருதுகள் - 2016 ஆம் ஆண்டில் மதிப்புள்ள அவுட்லுக் வணிகப் பெண்மணி [7]
 • தொழில்முனைவோர் இந்தியா விருதுகள் - 2016 ஆம் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் [8]
 • CMO ஆசிய விருதுகள் - 2016 இல் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர்
 • CEO இந்தியா விருதுகள் - 2016 இல் ஆண்டின் CEO விருது
 • அசோசெம் இன் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது - 2017 [9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "The glorious rise of Radhika Aggarwal, India's only Woman-Startup founder in the Unicorn Club". Business Insider. 8 March 2016. http://www.businessinsider.in/The-glorious-rise-of-Radhika-Aggarwal-Indias-only-Woman-Startup-founder-in-the-Unicorn-Club/articleshow/51309145.cms. பார்த்த நாள்: 4 March 2018. 
 2. "Meet Radhika Aggarwal, the first woman in India's unicorn club". Tech in Asia. 14 January 2016. https://www.techinasia.com/meet-radhika-aggarwal-woman-indias-unicorn-club. பார்த்த நாள்: 4 March 2018. 
 3. "ShopClues CBO Radhika Aggarwal on the rigors of an IPO". Business Insider. 15 August 2016. http://www.businessinsider.in/ShopClues-CBO-Radhika-Aggarwal-onthe-rigors-of-an-IPO/articleshow/53635876.cms. பார்த்த நாள்: 4 March 2018. 
 4. "ShopClues co-founder Radhika Aggarwal on the power of firm belief in one's potential and strong determination, to chart one's path". Outlook. 6 October 2016 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304231747/https://www.outlookbusiness.com/specials/outstanding-women/dogged-believer-3079. பார்த்த நாள்: 4 March 2018. 
 5. "Inspiring Stories Of Indian Women Entrepreneur: How They Stood Against The Society & Worked Against The Odds". Inc 42. 8 March 2015. https://inc42.com/entrepreneurship/inspiring-stories-of-indian-women-entrepreneur-how-they-stood-against-the-society-worked-against-the-odds/. பார்த்த நாள்: 4 March 2018. 
 6. "Newsmaker: Radhika Aggarwal & Sanjay Sethi". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 14 January 2016. http://www.business-standard.com/article/companies/newsmaker-radhika-aggarwal-sanjay-sethi-116011401218_1.html. பார்த்த நாள்: 4 March 2018. 
 7. "WOW – Women of Worth 2017 - Outlook Business". http://ow.outlookbusiness.com/. 
 8. "Entrepreneur India Congress 2017" இம் மூலத்தில் இருந்து 2018-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180906195652/https://www.entrepreneurindia.com/congress/awards_winner.php. 
 9. "ShopClues Co-Founder Radhika Aggarwal honoured as ASSOCHAM\'s Entrepreneur of the Year". https://www.retail4growth.com/news/shopclues-co-founder-radhika-aggarwal-honoured-as-assochams-entrepreneur-of-the-year-2803. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_அகர்வால்&oldid=3743666" இருந்து மீள்விக்கப்பட்டது