உள்ளடக்கத்துக்குச் செல்

ராணி துர்காவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி துர்காவதி
துர்காவதியின் படம்
கோண்டுவானாவின் இராணி
பிறப்பு5 அக்டோபர் 1524
Kalinjar Fort (Banda, உத்தரப் பிரதேசம்)
இறப்பு24 சூன் 1564(1564-06-24) (அகவை 39)
Narai Nala, Jabalpur, மத்தியப் பிரதேசம்
துணைவர்தல்பத் சா
குழந்தைகளின்
பெயர்கள்
வீர் நாராயண்
தந்தைகீரத் ராய்
மதம்இந்து மதம்

ராணி துர்காவதி (அக்டோபர் 5, 1524 - ஜூன் 24, 1564) அன்றைய கோண்ட்வானா தேசத்தை (இன்றைய மத்தியப் பிரதேசம்) ஆண்டவர். கோண்ட்வானாவை ஆண்ட தல்பத் ஷா 1548 ஆம் வருடம் இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் மிகவும் சாமர்த்தியத்துடன் ஆட்சியை நடத்தினார். ஆனால், 1564 ஆம் வருடம் முகலாய மன்னர் அக்பரின் படையெடுப்பிற்குப் பலியாகி விட்டது கோண்ட்வானா நாடு. அக்பர், தனது தளபதி அஸஃப் கானை கோண்ட்வானா நாட்டுக்கு அதிபதியாக்கினார். படையெடுத்து வரும் முகலாய வீரர்களுக்கு எதிராக ராணி துர்காவதி தனது படை வீரர்களை வழி நடத்திச் சென்றார். எத்தனையோ சாதுரியமாகப் போர் புரிந்தும், தனது தோல்வி நிச்சயம் என்பது ராணி துர்காவதிக்குத் தெரிய வந்தது. எதிரியின் கையால் சாவதைவிட தன் உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்த ராணி துர்காவதி, ஒரு கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு இறந்தார்.[1].

இதையும் பார்க்க‌

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ராணி துர்காவதி". Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2009-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_துர்காவதி&oldid=3569552" இலிருந்து மீள்விக்கப்பட்டது