ராஞ்சி அறிவியல் மையம்

ஆள்கூறுகள்: 23°24′25″N 85°20′24″E / 23.407°N 85.340°E / 23.407; 85.340
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஞ்சி அறிவியல் மையம்
Ranchi Science Centre
உருவாக்கம்29 நவம்பர் 2010
வகைஅறிவியல் காட்சியகம்
சட்ட நிலைஅரசு
நோக்கம்கல்வி
தலைமையகம்ராஞ்சி
தலைமையகம்
ஆள்கூறுகள்23°24′25″N 85°20′24″E / 23.407°N 85.340°E / 23.407; 85.340
தாய் அமைப்பு
சார்க்கண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம்

ராஞ்சி அறிவியல் மையம் (Ranchi Science Centre) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள முதல் அறிவியல் காட்சியகம் ஆகும்.[1] சார்க்கண்டு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சார்கண்டு மன்றத்தின் கீழ் உள்ளது. மூலதனச் செலவில் ராஞ்சி நகரை ஒட்டியுள்ள தாகூர் மலைக்கு அருகில் உள்ள சிரௌண்டி கிராமத்தில், சார்கண்டு அரசால் வழங்கப்பட்ட 13 ஏக்கர் நிலப்பரப்பில் 42,000 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று நிரந்தர கருப்பொருள் காட்சியகங்களைக் கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 87.5 கோடி[2] அல்லது $1,374,494 செலவினை சார்கண்டு அரசும் இந்திய அரசும் சமமாகப் பகிர்ந்து கொண்டது. இந்த அறிவியல் மையத்தை தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை உருவாக்கியுள்ளது. இது இந்தியா அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். இந்த மையம் 29 நவம்பர் 2010 அன்று முதல்வர் அருச்சுன் முண்டாவால் திறந்து வைக்கப்பட்டது.

சார்கண்டு வளங்கள் - ராஞ்சி அறிவியல் மையம்

காட்சியகங்கள்[தொகு]

 • வேடிக்கை அறிவியல்
 • அறிவியல் விடயங்கள் செயல்பாட்டு பகுதி
 • சார்கண்டு செல்வம்

அறிவியல் பூங்கா[தொகு]

சுமார் 8 ஏக்கர் பரப்பளவில், வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள், எளிய இயந்திரங்கள், ஒலி, ஒளியியல், ஊசல் மற்றும் நிலையான மாதிரிகள் ஆகியவற்றில் பல ஊடாடும் கண்காட்சிகள் உள்ளன.

மற்ற வசதிகள்[தொகு]

 • முப்பரிமாண காட்சியகம்
 • கலையரங்கம்
 • வாகன நிறுத்தம்
 • குழந்தைகளுக்கான அறிவியல் காட்சியகம்
 • கணினி கூடம்
 • மாநாட்டு அறை
 • கண்காட்சி வளர்ச்சி ஆய்வகம்
 • அலுவலகம்
 • அறிவியல் விளக்கப் பகுதி
 • அறிவியல் நூலகம்
 • தாரமண்டலம் அல்லது குவிமாடம் கையடக்க கோளரங்கம்
 • தற்காலிக கண்காட்சி கூடம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Telegraph - Calcutta (Kolkata) | Jharkhand | Regional Science Centre Opens Shop." The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage. Web. 1 Dec. 2010. <[1]>.
 2. "Ranchi Science Centre Open for Public." India News | Indian Business, Finance News | Sports: Cricket India | Bollywood, Tamil, Telugu Movies |Sify Mail,Astrology, Indian Recipes. Web. 1 Dec. 2010. <[2]>.