ராஜூக்கள்
ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் எனப்படும் சமூகத்தின் ஒரு பிரிவினர் 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் தமிழ்நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர். விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் இராஜபாளையம் அருகிலுள்ள கீழராஜகுலராமன் எனும் ஊரில் வந்து தங்கியிருந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கின் கீழ் பணிபுரிந்து வந்த இவர்கள் 1885 ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்த ஒரு பகுதியை விலைக்கு வாங்கி இராஜபாளையத்தை உருவாக்கி அங்கு மொத்தமாக வசிக்கத் தொடங்கினர்.இச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வேலூர் மாவட்டத்திலும் மலை ஒட்டியுள்ள பகுதிகளில் 15 கிராமங்களை உருவாக்கி விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.
அரசியல் பங்களிப்பு
[தொகு]இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் அரசியல் வழியாக பங்களிப்பு செய்து சிறப்பு பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்.
- பி. எஸ். குமாரசுவாமிராஜா - சென்னை மாகாண முதலமைச்சர் (1948 முதல் 1952), ஒரிசா மாநில ஆளுநர் (10 பெப்ரவரி 1954 -11 செப்டம்பர் 1956)
- என். ஆர். அழகர்ராஜா - முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர்.
முக்கியப் பிரமுகர்கள்
[தொகு]- பி. ஆர். ராமசுப்பிரமணிய ராஜா - ராம்கோ குழும நிறுவனங்களின் தலைவர்.
இலக்கியப் பங்களிப்பு
[தொகு]இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் தமிழ் இலக்கியம், படைப்புகள் வழியாக பங்களிப்பு செய்து சிறப்பு பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்.
- பன்மொழிப்புலவர் மு. கு. ஜகந்நாதராஜா
- தமிழ்ப் பெண் எழுத்தாளர் மதுமிதா
கல்வி நிறுவனங்கள்
[தொகு]ராஜூக்கள் சமூக அமைப்பின் / சமூகத்தைச் சேர்ந்தவரது நிர்வாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
°. ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி.
- ராஜூக்கள் கலை அறிவியல் கல்லூரி, இராஜபாளையம்.
- பி.ஏ.சி. ராமசாமி ராஜா பல்தொழில்நுட்பப் பயிலகம், இராஜபாளையம்.
- ஏ.கே.டி. தர்மராஜா மகளிர் கல்லூரி, இராஜபாளையம்.
- என்.ஏ. மஞ்சம்மாள் மகளிர் பல்தொழில்நுட்பப் பயிலகம், இராஜபாளையம்.
- பி.ஏ. சின்னையா ராஜா நினைவுப் பள்ளி, இராஜபாளையம்.
- ஏ.கே.டி. தர்மராஜா பள்ளி, இராஜபாளையம்.
- என்.ஏ. அன்னமராஜா பள்ளி, இராஜபாளையம்.
- என்.ஏ. கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, தேனி.
(இங்கு பிற கல்வி நிறுவனங்கள் இருப்பின் குறிப்பிடலாம்)
வெளி இணைப்புகள்
[தொகு]- Rajapalayam Kshatriya Rajus Association (Chennai) பரணிடப்பட்டது 2013-07-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Rajapalayam Rajus in the USA (ஆங்கிலம்)
- Rajapalayam Kshatriya Rajus Association (Oman) பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)