ராஜாமகள் (2023 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Raja Magal
ராஜாமகள்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஹென்றி. ஐ
தயாரிப்புஹாசன் ஜக்கிரியா
இசைசங்கர் ரங்கராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுநிக்கி கண்ணன்
படத்தொகுப்புபி. அஜித்குமார்
கலையகம்மூன்வாக் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 17, 2023 (2023-03-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாமகள் (Raja magal) 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஹென்றி. ஐ இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலினா, பேபி பிரதிக்சா, பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர் . இத்திரைப்படம் 2023 மார்ச்சு 17 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்த நடிகர் ஆடுகளம் முருகதாசுக்கு இப்படம் முதல் முக்கியக் கதாபாத்திரமாக அமைந்தது.[1] அகிலன் (2012) திரைப்படத்திற்குப் பின்னர், ஹென்றி இரண்டாவதாக இப்படத்தை இயக்கியிருந்தார்.[2]

வரவேற்பு[தொகு]

இப்படம் தமிழ்நாடு முழுவதும் 2023 மார்ச்சு 17 அன்று வெளியிடப்பட்டது. தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஒரு விமர்சகர் , குழந்தை நடிகையின் நடிப்பைப் பாராட்டி திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[3] தினத்தந்தி யில் இருந்து ஒரு விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்து, படத்தில் பல காட்சிகள் "தொடர் போல்" இருப்பதாகக் குறிப்பிட்டார்.[4] தினபூமி மற்றும் வீரகேசரியின் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வழங்கப்பட்டன.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajamagal Aadukalammurugadoss (2021-07-02). "கதாநாயகன் ஆனார் ஆடுகளம் முருகதாஸ் - Aadukalam Murugadoss turn as hero". Cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
  2. "Aadukalam Murugadoss-starrer Rajamagal teaser out". சினிமா எக்ஸ்பிரஸ்.
  3. S, Kalyani Pandiyan. "Rajamagal Movie Review: 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்'.. ராஜாமகள் படம் எப்படி?". Tamil Hindustan Times.
  4. "ராஜா மகள்: சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. March 21, 2023.
  5. "ராஜா மகள் - விமர்சனம்". Virakesari.lk.
  6. "ராஜா மகள் விமர்சனம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாமகள்_(2023_திரைப்படம்)&oldid=3831041" இலிருந்து மீள்விக்கப்பட்டது