உள்ளடக்கத்துக்குச் செல்

ராகேஷ் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகேஷ் ஷா
குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2007
தொகுதிஎல்லிஸ் பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ராகேஷ் ஷா

1 சனவரி 1962 (1962-01-01) (அகவை 62)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ராகேஷ்பாய் ஜஸ்வந்த்லால் ஷா (பிறப்பு 1 ஜனவரி 1962) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதி ஆவார். [1] தற்போது, இவர் குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள எல்லிஸ் பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியின் 12வது சட்டமன்ற [2] உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

1998 முதல் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினராக உள்ளார். இவர் அகமதாபாத் நகரின் (கர்னாவதி மகாநகர்) [3] கட்சித் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தார். 2006 முதல் 2009 வரை அகமதாபாத் நகர பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் இரண்டு முறை பல்டி வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ராகேஷ் ஷா 1 சனவரி 1962 அன்று ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அகமதாபாத்தில் உள்ள திவான் பல்லுபாய் பள்ளியில் படித்த இவர், குஜராத் பல்கலைக்கழகத்தின் நவ்குஜராத் வணிகக் கல்லூரியில் பயின்று வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ராகேஷ்பாய் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்துடன் (RSS) தன்னை இணைத்துக் கொண்டார்.

தொழில்

[தொகு]

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

[தொகு]

அவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நகர காரியத் தலைவராக இருந்தார். [4]

அரசியலில் வகித்த பதவிகள்

[தொகு]
2000 - 2005 பல்டி வார்டு கவுன்சிலர், அகமதாபாது மாநகராட்சி
2005 - 2010 பல்டி வார்டு கவுன்சிலர், அகமதாபாத் மாநகராட்சி
2006 - 2009 பொருளாளர், பாரதிய ஜனதா கட்சி, அகமதாபாத்
2007 - 2012 எம்.எல்.ஏ., எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதி, குஜராத் சட்டமன்றம். [5]
2010 - 2013 தலைவர், பாரதிய ஜனதா கட்சி, அகமதாபாத்.
டிசம்பர் 2012 முதல் எம்.எல்.ஏ., எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதி, குஜராத் சட்டமன்றம். (2வது முறை)
மார்ச் 2013 - மார்ச் 2016 தலைவர், பாரதிய ஜனதா கட்சி, அகமதாபாத் (2வது பதவிக்காலம்)
மார்ச், 2016 முதல் செயற்குழு உறுப்பினர், பாஜக - குஜராத் பிரதேசம்

ராகேஷ் ஷா [6] 2007 இல் குஜராத்தின் எல்லிஸ் பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றார் [7] 2006 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை அகமதாபாத் நகரத்தின் பாஜக கட்சியின் பொருளாளராக இவர் பதவி வகித்தார்.

அங்கீகாரம்

[தொகு]

தற்போது இவர் குஜராத்தின் சிறப்பு பாரத் ஒலிம்பிக்ஸ் தலைவராக உள்ளார். மேலும் குஜராத் மாநில செஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். [8]

2007 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு 67,600 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்ற இவர் [9] 2012 தேர்தலில் 76,400 வாக்குகள் முன்னிலை வெற்றி பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat State Portal" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  2. "Rakesh Jashvantlal Shah - MLA Ellisbridge" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222053456/http://www.gujaratelections.in/rakesh-jashvantlal-shah-mla-ellisbridge/. 
  3. "Bharatiya Janata Party : Karnavati Mahanagar". Archived from the original on 1 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  4. "Rashtriya Swayamsevak Sangh" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  5. "List of BJP Members (Thirteenth Gujarat Legislative Assembly)" (PDF). Archived from the original (PDF) on 28 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  6. Shah, Rakesh. "Rakesh Shah".
  7. "Ellis Bridge Election and Results 2017, Candidate list, Winner and Runner-up".
  8. "GSCA- Gujarat State Chess Association". பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  9. ADR. "Rakesh J Shah(Bharatiya Janata Party(BJP)):Constituency- ELLISBRIDGE(Ahmedabad ) - Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_ஷா&oldid=4108645" இலிருந்து மீள்விக்கப்பட்டது