உள்ளடக்கத்துக்குச் செல்

ராகுல் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகுல் குமார்
பீகார் சட்டமன்ற உறுப்பினர், மாநிலச் சட்டப் பேரவை
பதவியில்
20 நவம்பர் 2010 – 20 நவம்பர் 2015
முன்னையவர்சாந்தி சர்மா
தொகுதிகோசி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 செப்டம்பர் 1984 (1984-09-21) (அகவை 39)
கோரா, கோசி, ஜகானாபாத், பீகார்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்சாலினி சர்மா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்பட்னா
முன்னாள் கல்லூரிஇராமகிருஷ்ணா மிசன் வித்யாபித், தியோகர்

ராகுல் குமார் (Rahul Kumar பிறப்பு:செப்டம்பர் 21,1984) இந்தியாவின் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார், பீகார் சட்டமன்றத்தில் 2010-2015 காலத்திற்கு கோசி (விதன் சபா தொகுதி) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது தந்தை டாக்டர் ஜெகதீஷ் சர்மாவும் ஜேடியூ உறுப்பினராகவும், பீகாரின் ஜெஹானாபாத் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தில் 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் கோசி தொகுதியில் எல். ஜே. பி. யின் ஜகதீஷ் பிரசாத் என்ற கௌசல் யாதவை இவர் தோற்கடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ராகுல் குமார் 21 செப்டம்பர் 1984 இல் பீகாரின் ஜெகானாபாத் மாவட்டத்தில் உள்ள கோசி பகுதியில் உள்ள கோர்ரா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் ஜகதீஷ் சர்மா நாடாளுமன்ற உறுப்பினராகவும், இவரது தாயார் சாந்தி தேவி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2015 முதல் 2019 வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் தொடர்புடைய மத்திய-இடது அரசியல் கட்சியான இந்துசுதானி அவாம் மோர்ச்சா உறுப்பினராக இருந்தார். 2019 ஆம் ஆண்டில், சோசலிச கொள்கைகளைக் கொண்ட மற்றொரு மத்திய இடது கட்சியான ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

பீகார் சட்டமன்றத்திற்கு கோசி (விதன் சபா தொகுதி) இலிருந்து 2010 இல் ஜனதா தள உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

2014 ஆம் ஆண்டில், அமெரிக்காசில் நடைபெற்ற ஏ. சி. ஒய். பி. எல் மாநாட்டில் தேர்தல் பரிமாற்றத் திட்டம் குறித்து விரிவுரை நிகழ்த்தினார்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. News published in Dainik Today பரணிடப்பட்டது 2018-05-16 at the வந்தவழி இயந்திரம்
  2. Statistical Reports Vidhan Sabha Election 2010
  3. , Ghosi (Vidhan Sabha constituency) Assembly Election 2010 பரணிடப்பட்டது 2017-03-23 at the வந்தவழி இயந்திரம்
  4. Bihar Assembly Election Results in 2010 பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்
  5. Ghosi Election Result 2016 பரணிடப்பட்டது 2017-03-23 at the வந்தவழி இயந்திரம்
  6. Candidate From Ghosi, Jehanabad Constituancy பரணிடப்பட்டது 2017-03-23 at the வந்தவழி இயந்திரம்
  7. "Ghosi (Bihar) Assembly Election Results 2015 - Winner and Runner-up Candidates". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14. Ghosi (Vidhan Sabha constituency) Bihar Legislative Assembly 2015 Bihar Legislative Assembly election

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுல்_குமார்&oldid=3970841" இலிருந்து மீள்விக்கப்பட்டது